Wednesday, March 6, 2019

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களுடைய சொத்துகள் குறித்தான

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களுடைய சொத்துகள் குறித்தான பிரமாண வாக்குமூலத்தை வேட்பு மனுவோடு தாக்கல் செய்ய வேண்டும். தேர்தல் ஆணையம் தற்போது சொத்துக்களின் விவரங்களோடு அதனடைய மதிப்பீட்டையும், பிரமாண வாக்குமூலத்தில் (Affidavit)  தெரிவிக்க வேண்டுமென்று அறிவுறுத்தியுள்ளது. நல்ல முடிவு தான். இதுமட்டுமல்லாமல் வேட்பாளர்களின் கடந்த காலத்தின் சொத்து மதிப்பீடு என்ன, இன்றைக்குள்ள சொத்து மதிப்பீடு என்ன என்று குறிப்பிட்டால் ஜனநாயகத்தில் ஆரோக்கிய அரசியலுக்கு வழிவகுக்கும். 

இது குறித்து உச்சநீதிமன்றத்தில் கடந்த 2005இல் பொது நல வழக்கும் நான் தொடர்ந்ததில் நீதிபதிகள் இதுவொரு நல்ல அணுகுமுறையே என்ற கருத்தை தெரிவித்ததோடு, இதுமாதிரியான மனுக்கள் ஏற்கனவே உச்சநீதிமன்றத்திற்கு வந்ததாக தெரிவித்தனர். எனவே வேட்புமனுவோடு வேட்பாளர்கள் இதுபோன்ற சொத்து விபரங்களை தெரிவித்தால் மக்களுக்கு நல்லது. மேலும் கடந்த காலத்தில் அரசியலில் தங்களது பூர்விக சொத்துக்களை இழந்தவர்களின் அடையாளங்களும், விவரங்களும் தெரியவரும். அப்படிப்பட்ட அரசியல் அப்பாவிகளின் நிலையும் புலப்படும். இந்த வெளிப்படைத்தன்மை ஜனநாயக முறையில் அவசியமே.

#தேர்தல்
#KSRadhakrishnanpostings
#KSRpostings 
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
04-03-2019


No comments:

Post a Comment