Monday, March 18, 2019

எம்.ஜி.ஆரின் கல்லூரியையே #புறக்கணிக்கிறதாஅதிமுக ?

#எம்ஜிஆரின்பக்தர்கள்என்பவர்களின்
பார்வைக்கு
எம்.ஜி.ஆரின் கல்லூரியையே #புறக்கணிக்கிறதாஅதிமுக ?
———————————————-
அ.தி.மு.க.வை உருவாக்கிய தலைவரான மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டை மிகவும் ஆர்ப்பாட்டத்துடன் கொண்டாடி முடித்தார்கள் அ.தி.மு.க ஆட்சியில் தற்போது அமர்ந்திருப்பவர்கள்.
ஜெயலலிதா முதல்வராக அமர்ந்தபோதிருந்தே எம்.ஜி.ஆரின் பெயரை இருட்டடிப்பு செய்வதற்கான பல வேலைகள் துவங்கிவிட்டன. அவருடைய வாழ்வுடன் தொடர்புடையை பல அம்சங்கள் திட்டமிட்டு ஒதுக்கப்பட்டன.அவற்றில் ஒன்று எம்.ஜி.ஆரின் சத்யா ஸ்டூடியோ.



சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள சத்யா ஸ்டூடியோவுக்குப் பின்னால் ஒரு வரலாறே உண்டு. பிரபல இயக்குநர் கே.சுப்பிரமணியம் பொறுப்பில் இதே ஸ்டூடியோ இருந்தபோது எம்.கே. தியாகராஜ பாகவதர் துவங்கிப் பலரும் இதே ஸ்டூடியோவில் நடித்திருக்கிறார்கள். அவரிடமிருந்து கைமாறி எம்.ஜி.ஆரின் கைக்கு வந்து ‘’சத்யா ஸ்டூடியோ’வாக மாறியபோது இங்கு அவர் நடித்த பல படங்களுக்கான படப்பிடிப்பு நடந்திருக்கிறது. தி.மு.க.விலிருந்து விலகி அவர் அ.தி.மு.க வைத் துவக்கியபோது தொண்டர்கள், கட்சிப்பிரமுகர்களைச் சந்திப்பதற்கான இடமாகவும் இருந்திருக்கிறது சத்யா ஸ்டூடியோ.
1987 ல் எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு சத்யா ஸ்டூடியோ வளாகம் சத்தியபாமா மாளிகை ஆகி- பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியாக மாறி 1996 ல் துவக்கப்பட்டபோது கல்லூரியைத் திறந்து வைத்தவர் டாக்டர் கலைஞர்.
சுமார் நான்காயிரம் மாணவிகள் வரை படிக்கும் இந்தக் கல்லூரியில் அடிப்படை வசதியான குடிநீர் இணைப்புக் கூட இதுவரை தரப்படவில்லை என்பதைக் கேள்விப்பட்டபோது அதிர்ச்சியாக இருந்தது. முன்னாள் முதல்வர் பெயரில் நடக்கும் கல்லூரிக்கே இந்தக்கதியா என்றும் தோன்றியது.
விசாரித்தபோது அது உண்மை தான் என்பது தெரிய வந்தது.
எம்.ஜி.ஆர் ஆரம்பித்த அ.தி.மு.க ஆட்சி தான் இங்கு ஆளும்கட்சியாக இருக்கிறது. அவர் பெயரைச் சொல்லித்தான் தமிழகம் முழுக்க நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்கள் நடந்தன. சிலைகள் திறக்கப்பட்டன. அலங்கார வளைவுகள் நிறுவப்பட்டன. கல்விநிறுவனங்களில் சிறப்பு இருக்கைகள் அமைக்கப்பட்டன.
இருந்தும் அவருக்குச் சொந்தமான இடத்தில் இயங்கும் பெண்கள் கல்லூரிக்கு மெட்ரோ குடிநீர் இணைப்புக் கொடுப்பதைக் கூட அ.தி.மு.க அரசு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதும் செய்யவில்லை. எடப்பாடி முதல்வரான பிறகும் செய்யவில்லை என்று சொன்னால் அதை எப்படி எடுத்துக் கொள்வது?
தமிழகத்திற்குச் சத்துணவுத்திட்டத்தை அமல்படுத்தி இளைய மாணவ சமுதாயம் பசியாறக் காரணமாக அமைந்த அ.தி.மு.க.வைத் துவக்கிய தலைவரான எம்.ஜி.ஆருக்கே இந்தப் புறக்கணிப்பு என்றால் ‘’ இங்கு உண்மைகள் தூங்கவும், ஊமைகள் ஏங்கவும் நானா பார்த்திருப்பேன்’’ என்று எம்.ஜி.ஆர் நடித்த ‘’ எங்க வீட்டுப் பிள்ளை’’ பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருகின்றன.

விடுதலை புலிகள் இயக்க தலைவர் 
பிரபாகரனால் எனக்கு எம்.ஜி.ஆரின்
அறிமுகம்;என்னை  எம்.ஜி.ஆர் வக்கில்
என  அழைப்பார் .அந்த நிலையில் 
சுட்டிக்காட்டுவது எனது கடமை.

#MGR
#எம்ஜிஆர்
#சத்யாஸ்டூடியோ
#KSRadhakrishnanpostings 
#KSRpostings 
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
18– 03-2019

No comments:

Post a Comment