காவேரி, குடமுருட்டி, வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு
இந்த ஐந்து நதிகளும்... திருவையாறில்...தஞ்சாவூருக்கு அருகில் பதினெட்டாம்பெருக்கு பெண்களை முன்னிறுத்தி செய்வதுதான்...
காவிரியில் புதுத் தண்ணீர் திறந்து விடப்பட்டு பாய்ந்து வரும்..
அதை கொண்டாடி, காவிரிக்கு நன்றி சொல்ல வேண்டும்.
கலந்த சாதங்கள் கட்டி எடுத்துக்கொண்டு, நல்ல ஆடைகள, மருதாணி இட்டு, வளையல், மாலைகள், கதம்பம் பூ அலங்காரங்களுடன், குடும்பம் குடும்பமாக ஏதாவது ஒரு நதிக்கரையில் மாலை 5 மணிக்கு...வெயில் தாழ.
நடந்து சென்று ஆற்றோரத்தில் ஆடி பெருக்கை கொண்டாடுவார்கள் ...

No comments:
Post a Comment