நுண்பொருளாதாரம் (Micro Economics), பொருளாதார சிக்கலும் சரிவும், மக்கள் தொகை பெருக்கம் வேலைவாய்ப்பின்மையும்
--------------
நுண்பொருளாதாரம் (Micro Economics) என்ற நிலையில் இந்தியாவின் வளர்ச்சியை நோக்கினால் நமது பொருளாதாரம் மிக மோசமான, கவலைக்குரியதொரு நிலையில் இருக்கிறது. இனி வரும் காலங்களில் ஊழியர்களுக்கான சம்பளம், ஓய்வூதியம் போன்றவற்றை எப்படி வழங்க இயலும் என்ற கேள்வி எழுகிறது.
மற்றொரு பக்கம் மக்கள் தொகை மால்தஸ் கோட்பாடினை மீறி கட்டுப்பாடற்று சமநிலையில்லாமல் பெருகி உலகின் மிகப்பெரிய geomentrical ratio மக்கள் தொகை கொண்ட நாடாக உருவாகி வருகிறது. இதனால் நாட்டில் பல சமூகப் பிரச்சனைகள் எதிர்கால்த்தில் ஏற்படப்போகிறது. வேலைவாய்ப்பின்மை, பசி, பட்டினி, வறட்சி, குடிநீர் பிரச்சனை, தற்சார்பின்மை, சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஆகியன மறைமுகமாக ஏற்படலாம். மக்கள் தொகை பெருக்கத்தால் ஏற்படும் இத்தகைய பிரச்சினைகளுக்கு என்ன தீர்வு கிடைக்கப்போகிறது என்று தெரியவில்லை.
மக்கள் தொகைப் பெருக்கத்திற்கு இதற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா? இதனை உள்ளார்ந்து பார்த்தால் தான் தெரியும். இது தான் இன்றைய நாட்டின் நிலைமை. அதைக்குறித்து தான் இன்றைய தமிழ் இந்து திசையின் நடுப்பக்க கட்டுரையில் வந்துள்ளது.
விலைவாசி ஏற்றம்,தகுந்த அடிப்படை கட்டமைப்பு இல்லாமை என பல சிக்கல்கள்.....
இதெல்லாம் அரசியல்மனமாச்சரியங்களை கடந்து தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனை. இதைவிடுத்து இவருடைய மண், அவருடைய மண், இந்த தத்துவங்கள் என்று பேசி பெருமிதமில்லை. இந்த நிலைமையை குறித்து யோசிக்க யாரும் இல்லை. பொதுவெளியில் சொன்னாலும், அது குறித்த அக்கறையில்லாமல் தங்களுக்கான நலம் சார்ந்த போக்கிலேயே போனால் அடிப்படை கட்டமைப்பு நாசமாக போய்விடும். இதை தீர்க்க என்ன வழி என்பதை கவனித்தால் தான் எதிர்காலத்தில் சமுதாயம் ஜீவிப்பது எளிதாகும். வேறென்ன சொல்ல?
*Critical issues are non-issues here. Pretty issues are Critical here.*
இப்படியான ஒரு கேலிக்குரிய நிலையில் நாடு உள்ளது. ஒரு நாட்டிற்கு திடமான பொருளாதாரமும், தற்சார்பு நிலையும் இருந்தால் மட்டுமே மற்ற விடயங்களை குறித்து திடமாக சிந்திக்கவும் முடியும்.
இந்த பிரச்சனையை கேட்டு உணருங்கள் அல்லது படித்து புரிந்து கொள்ளுங்கள். இல்லையெனில் என்ன செய்ய? என்னைப் போன்றோரது குரல்கள் அம்பலத்துக்கு வராது. இப்படியான பிரச்சனைகளில் முனைப்பு காட்டுபவர்கள் பொருளாதார அடிப்படையிலான வாசிப்பு மற்றும் புரிதல் வேண்டும். அப்படியில்லாத த்துவா, அந்த மண, இந்த மண் இவர் அவர் மண என வெட்டிப்பேச்சுகள் பயனளிக்காது. நமது பொருளாதாரம் பாழ்பட்டு வருகிறது.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
12-08-2019
No comments:
Post a Comment