Monday, December 9, 2019

சீனா_இலங்கை_அம்மன்_தோட்டா #துறைமுகம் #சில_கமக்கங்கள*

*#சீனா_இலங்கை_அம்மன்_தோட்டா #துறைமுகம் #சில_கமக்கங்கள*
———————————————
இலங்கையில் அம்மன் தோட்டா துறைமுகம் 99 வருடம் சீனாவுக்கும் குத்தகைக்கு  கொடுத்ததை கோத்தபய திரும்பப் பெற்றுவிட்டார் என்று அறிவிப்பு வந்தது.
ஆனால் சத்தமில்லாமல் இந்தியப் பெருங்கடலில் ஒரு தீவினை தனியாக ஒதுக்கி சீனா அதில் துறைமுகம் கட்ட மகிந்த ராஜபக்சே முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அங்கு பெரிய கட்டடங்களும் கட்டுவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு இப்போது பணிகள் நடந்து கொண்டு வருகின்றன. 

இலங்கை நிலப்பரப்புடன் புதிதாக இணையும் கொழும்பு துறைமுக நகரின் 269 ஹெக்டேர் நிலப்பகுதியை இந்நாட்டிற்கு பெற்றுக் கொடுக்கும் உத்தியோகபூர்வ நிழ்வு நடைபெற்றது
பிரதமர் மஹிந்த ராஜபக்சேவின் தலைமையில் இந்த நிகழ்வு சமீபத்தில
நடைபெற்றது.

இந்நாட்டுக்கு புதிதாக இணையும் இந்த நிலப்பரப்பிற்காக நிறைவு முத்திரை ஒன்றும் வெளியிடப்பட்டது. மேலும் வெளிநாடுகளுக்கு இன்று முதல் துறைமுக நகரில் முதலீடு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மகிந்த ராஜபக்சே ஜனாதிபதி பதவியில் இருந்த போது சீன ஜனாதிபதி ஷீ ஜிங் பின்க் தலைமையில் இந்த துறைமுக நகர திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
09.12.2019
#ksrposts
#ksradhakrishnanposts
#இலங்கை
#அம்மன்_தோட்டா


No comments:

Post a Comment

*What lies behind you and what lies before you are tiny matters compared to what lies within you*.

*What lies behind you and what lies before you are tiny matters compared to what lies within you*. Believe in yourself. You know personal de...