Saturday, March 16, 2024

மறந்து விடுங்கள் சிலரின் அறிவற்றப் பேச்சுகளை…

பழகுவதில் நான்குவிதமான மனிதர்கள் இருக்கிறார்கள்.......

1.எதிர்பார்த்தது எதுவோ அதற்காகவே பழகுவார்கள். கிடைத்ததும் சென்றுவிடுபவர்கள்.மீண்டும் தேவைப்படும்போது வருவார்கள்.
100 % சுயநல வாதிகள் இவர்கள்.

2.பலனை அடைவதற்காக சில நன்மையைச் செய்வார்கள். இப்படிப்பட்டவர்கள் கொடுப்பதற்கும் வாங்குவதற்கும் சரியாக இருக்கும்.
அவரின் காரியத்தை நிறைவேற்ற நமக்கும் சில காரியம் செய்வார்கள். இப்படிப்பட்டவர்களிடம் தாராளமாக பழகலாம். 
ஆனால் இவர்கள் அனைவரிடமும் 
இப்படி பழக மாட்டார்கள்.

3.பலனை எதிர்பார்க்கவே மாட்டார்கள். அவர்களாகவே அனைத்தையும் செய்வார்கள். "எதற்க்காக செய்கிறீர்கள்?" என்றால் "நான் செய்யாமல் வேறு யார் செய்வார்கள்?" என்பார்கள். அவர்கள் அன்பால் உங்களை தினறடிப்பார்கள். இப்படிப்பட்டவர்களால் தான் நம் சமுதாயம் செழிக்கிறது இப்படிப்பட்டவர்களை உறவினராக நண்பனாக வைத்திருக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

4.யாருடனும் பழக்கம் அதிகம் இருக்காது. ஆனால் அன்பு மிகுதியாக இருக்கும். அறிவும் அப்படியே. அல்லது அன்பு செலுத்த தெரியாது. இவர்களிடம் நாம் கேட்டால் பலன் அடையலாம். (உதாராணமாக தாத்தா பாட்டிகளை சொல்லலாம்). 
இவர்களிடம் பழகுவதற்கு தவம் 
செய்திருக்க வேண்டும்.

மேலே உள்ள முதல் பட்டியலில் இருப்பவர்களால் தான் அதிகம் ஏமாற்றம் வருகிறது.இப்படி போலித்தன்மை வாய்ந்த மனிதர்களிடம் உங்களை எச்சரிக்கையாக இருந்து காத்துக் கொள்ளுங்கள். அவர்களை ஆராய்ந்து இனம் கண்டுகொள்ளுங்கள்.மாற்றம் ஆரோக்கியமானதாக இருக்கலாம்.
ஆனால் ஏமாற்றம் என்றுமே ஆரோக்கியமற்றது.

மனிதனின் மாற்றத்தைப் புரிந்து கொள்ளுங்கள்.

வீணாக நம்பிக்கை வைத்து ஏமாறாதீர்கள்.

ஏமாற்றத்திலிருந்து மாற்றத்திற்க்கு வாருங்கள்...!

மறந்து விடுங்கள் சிலரின் அறிவற்றப் பேச்சுகளை,மறுத்து விடுங்கள்உங்களை உதாசீனப்படுத்தும் உறவுகளை...இங்கு எதுவும் நிரந்தரம் இல்லை.இன்று நீ..
நாளை யாரோ..

நீ ஏன் இப்டி இருக்க ? 
என்று கேட்காத ஆத்மாக்கள், 
அவ்வாறு கேட்காமல் நம்மை 
நோக்கி ஒரு புன்னகை 
அளிப்பதன் மூலம் 
நம் மாற்றத்திற்கான 
முதல் முத்தம் இடுபவர்கள்.

 

படம்- என் மண்….


1 comment:

  1. உண்மை தான் அண்ணா...
    அனுபவங்கள் பாடம் கற்று தருகிற ஆசான்கள்

    ReplyDelete

கதைசொல்லி.

*கதைசொல்லி 34 ஆம் இதழ் விரைவில் வெளி வருகிறது*. *பொதிகை- பொருநை-கரிசல்* #* * #கேஎஸ்ஆர்போஸ்ட்  #ksrpost 15-5-2024.