Saturday, March 7, 2015

அணுசக்தி அற்ற அமைதிப்பகுதி ( Creation atom-free zones )

























இந்தியப் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி, செக்கோஸ்லோவேகியா பிரதமர் ஜோசெப் லெனார்ட் ஆகியோர் கூட்டறிக்கையாக சரியாக கடந்த 50ஆண்டுகளுக்கு முன்னால், அதாவது 06-03-1965 அன்று கையொப்பமிட்டு, அணுசக்தி இல்லாத பகுதியாக இந்தியாவும், செக்கோஸ்லோவேகியாவும் செயல்படும் என்றும், உலகநாடுகளிலும் இந்த முடிவுகளை மேற்கொள்ள வேண்டுமென்றும், அணுஆயுத சோதனைகளையும், தரையின் கீழ் அணுவை புதைக்கும் நடவடிக்கைக்கு துணைபோன மாஸ்கோ ஒப்பந்தத்தையும்  திரும்ப்ப்பெறவேண்டும் என்று உடன்படிக்கை  வெளியிட்டனர்.

அது முக்கிய ஆவணமாக அப்போது பன்னாட்டளவில் கருதப்பட்டது. ஆனால் இன்றைக்கு சுற்றுச்சூழல் சீர்கேடு, மனித உயிருக்கு ஆபத்தாக இருக்கின்ற அணு உலைகளும், அணுசக்தி சம்பந்தப்பட்ட பல கேந்திரங்களும் எந்த கவலையுமில்லாமல் மத்திய அரசு நிர்மானித்துக்கொண்டே இருக்கின்றது.


சாஸ்திரி- ஜோசெப் லெனார்ட் இருநாட்டு ஒப்பந்தம் எதற்குப் போடப்பட்டது?, அது நடைமுறையில் இல்லாத அர்த்தமற்ற ஒப்பந்தமாகிவிட்டது. இப்படி ஒரு ஒப்பந்தம் இருக்கின்றதா என்று மத்திய அரசின் கவனத்திற்கு தெரியுமா என்பதுகூட கேள்விக்குறிதான். 

No comments:

Post a Comment