Wednesday, July 26, 2017

திருவணந்தபுரம் ரயில்வே கோட்டத்தில் இருந்து கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி பகுதிகளை மதுரை கோட்டத்துடன் இணைப்பது பெரும் பாடாக உள்ளது.

தற்போது குமரி மாவட்டம், திருநெல்வேலி பகுதிகளில் உள்ள ரயில்வே நிர்வாகம், திருவணந்தபுரம் கோட்டத்தின் கீழ் செயல்படுகிறது. இந்த கோட்டத்தினை மாற்றி மதுரை கோட்டத்துடன் இணைக்க வேண்டுமென்று 1984 இல் இருந்து பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டிருந்தன. கேரள முதல்வர் பிணராயி விஜயன், மத்திய அரசுக்கு திருவணந்தபுரத்தை எர்ணாகுளம் இரயில்வே கோட்டம் அமைத்து அத்துடன் இணைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். பாலக்காடு கோட்டத்தையும் மாற்றி அமைக்கும்படியும் கேட்டுக் கொண்டுள்ளார்.



குமரி மாவட்டம், திருநெல்வேலி மாவட்டம், தூத்துக்குடி மாவட்டங்களின் ரயில்வே நிர்வாகத்தை மதுரைக் கோட்டத்தோடு சேர்க்கலாம். அல்லது திருநெல்வேலியை தனியாக கோட்டமாக நிறுவலாம். இதற்கான நடவடிக்கைகளை எடுக்காமல் மத்திய அரசு பாராமுகமாக உள்ளது. கேரள லாபி இந்த பிரச்சனையில் டெல்லியில் வம்படித்தனம் செய்கின்றது.

எப்பொழுதும் டெல்லியில் தமிழகத்திற்கு எதிராக கேரள லாபி நேரு காலத்தில் இருந்தே இருந்து வருகிறது. முன்னாள் அமைச்சர் கிருஷ்ண மேனன், பணிக்கர், மேனன் என இன்றைக்கு உள்ள அதிகாரிகளும் தங்களின் கேரள மாநில நலனுக்காக தங்கள் பணிகளை செய்யட்டும். ஆனால் தமிழக நலன்களை கபளீகரம் செய்து கேரளாவை பாதுகாப்பது என்பது ஏற்புடையதல்ல.


#குமரி_கோட்டம்
#Railway_divisions
#Tiruvananthapuram_Division
#Southern_Railway
#Tirunelveli_District
#Tuticorin_District
#Kanyakumari_District
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
25-07-2017

No comments:

Post a Comment

*Worrying is like sitting in a rocking chair*

*Worrying is like sitting in a rocking chair*. It gives you something to do but it doesn't get you anywhere.Worry is a total waste of ti...