Tuesday, February 25, 2020

#தி_ஜானகிராமன்_வர்ணித்த_அந்தக் #காவேரி_ஆற்றங்கரையில்..... #திருச்சி #திருப்பராய்த்துறை #அம்மா_வந்தாள்



————————————————-
காவேரி   ஆற்றின்  அழகை  கீர்த்தியை
தி.ஜானகிராமனைப் போல வேறு யாராலும் வர்ணித்துவிடமுடியாது.
அப்படியொரு வர்ணனை அவருடைய படைப்புகளில் சிதறிக்கிடக்கும்.
’அம்மா வந்தாள்’ நாவல் அதற்குக் கச்சிதமான உதாரணம். காவேரி ஆற்றங்கரை. அதில் பொங்கும் அலைகள், பிரவாகம். கரையோரம் பொழுது கீழிறங்குகிற காட்சி. அதன் மோனம்.  வெளிச்சம் நரைத்துக் கொண்டே போகிற மாலைப் பொழுதை தி.ஜானகிராமன்  வர்ணித்துத் தீர்த்திருப்பார்.




அவர் வர்ணித்த அதே காவிரி ஆற்றங்கரை. அம்மா வந்தாள்- நாவலின் கதாநாயகனான அப்பு படிக்கிற வேத பாடசாலை.  காதில். விழும்
உபந்நியாசங்கள். அதே காவேரியில் குளித்து வெள்ளைப் புறாக்களைப் போன்று வளைந்த பாதங்களுடன் வளைய வந்து அப்புவை விரும்பும் இந்து. அப்புவின் தாயார் பவானியம்மாள் என்று எத்தனை உயிரோட்டமான பாத்திரங்கள்.இதெல்லாம் நினைவுக்கு வந்தன அதே காவேரிக் கரையோரம் அண்மையில்  இரண்டு   நாட்கள் தங்கியிருந்த போது.  திருச்சி  திருப்பராய்த் துறையில் இருக்கிற ராமகிருஷ்ண தபோவனத்தில் – விவசாயிகள் நடத்திய தமிழக நீர்வளப் பாதுகாப்புப் பயிற்சி முகாம் நடந்த
போது, இரண்டு நாட்களும் அதில் கலந்து கொண்டு பேசும் சந்தர்ப்பம் வாய்த்தது.

இதே இடத்தைத் தான் தான் எழுதிய ”அம்மா வந்தாள்” நாவலின் பின்னணிக் களமாக ஒருமுறை குறிப்பிட்டிருந்தார் ஜானகிராமன்.அருகில் உள்ள காவேரி-முக்கூடல் (முக்கொம்பு) அரசு விருந்தினர்  மாளிகையில் தங்கியிருந்தேன். இடத்தைச் சுற்றி அதே மோனத்தோடு நகரும் காவேரிக் கரை. இதே காவேரி தலைக் காவேரி கர்நாடகத்தில்  துவங்குகிற இடத்திலிருந்து தவங்கிப் பயணித்து “நடந்தாய் வாழி காவேரி’ என்கிற நீர்ப்பயண நூலை சிட்டியுடன் இணைந்து எழுதியிருக்கிறார் தி.ஜா. 
அந்த ஆற்றோரக் குளுமையில் இரண்டு நாட்கள் இருக்கக் கிடைத்த சந்தர்ப்பம் பெரும் ஆசுவாசம்!

#தி_ஜானகிராமன்
#காவேரி_ஆற்றங்கரையில்.....
#திருச்சி  #திருப்பராய்த்துறை
#அம்மா_வந்தாள்

*கே.எஸ்.இராதாகிருஷ்ணன்* 
22-02-2020

#kSRadhakrishnan_postings*
#KSRpostings

No comments:

Post a Comment

*If you're not making mistakes. Then you're not making decisions*

*If you're not making mistakes. Then you're not making decisions*. You know success seems to be connected with action. Successful pe...