Saturday, February 15, 2020

ப.சிதம்பரத்திற்கு ஒரு கேள்வி

ப.சிதம்பரத்திற்கு ஒரு கேள்வி 
டெல்லிக்கு வந்த ராஜபக்சே 2009 ல் ஈழத்தில் நடந்த இறுதிப்போரில் அவருடைய வார்த்தையில் - பயங்கரவாதிகள்( நமக்கு அப்பாவித்தமிழர்கள்) ஒன்றரை லட்சம் பேரை அழித்தொழித்தோம் என்று மமதையாகவும், கம்பீரத்துடன் சொல்கிறார் என்பது வேதனையான விடயம்.
அன்றைக்கு ப.சிதம்பரம் மத்திய அமைச்சர். இன்றைக்கு ஈழத்தில் குடியுரிமை வழங்கச் சொல்லி ஈழ மக்களுக்காக வாதாடுகிறார்.
அப்படி என்றால் ராஜ பக்சே” இந்தியாவின் உதவியோடு தான் தமிழ் மக்களை அழித்தோம்” என்று சொன்னதற்கு சிதம்பரம் என்ன பதில் சொல்லப் போகிறார்?
கடந்த 2009ல்- இலங்கையில் பெரும்  கொடூர இன அழிப்பு நடந்தபோது, இதைப் பொறுப்பில் இருந்து கவனித்து வந்தவரும் அவரே.
ஒருகாலத்தில் ‘ரேடிக்கல்,ஆளும் காங்கிரசின் இளைஞர் அணிச் செயலாளர், மத்திய அமைச்சர் எனப் பல பொறுப்புகளில் இருந்தவர் ப.சி.மட்டுமல்ல, ராஜபக்சேயே ஆதரிக்கும் இந்து ராமும் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?
இதே இந்து ராமும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தவர். மெத்தப் படித்த இந்த அறிவுஜீவிகள் -ராஜபக்சே- ’இந்துஸ்தான் டைம்ஸ்’ நாளிதழுக்கு அளித்த பேட்டி பற்றி என்ன சொல்லப் போகிறார்கள்?

மக்களின் மறதியை நம்பி அவர் அப்படிப் பேசியிருக்கலாம்.
ஆனால் நமக்கோ ஒன்றரை லட்சம் மக்களுக்கு மேல் அழுது இறந்த பாவம் மனதில் இப்போதும் ஆறாத ரணங்களாக உள்ளது.

No comments:

Post a Comment

ராஜாராயணனின் 29-4-1950 இல், 74 ஆண்டுகளுக்கு முன் தனது நண்பர் கம்யூனிஸ்ட் கட்சி தோழர் நாலாட்டின் புதூர் என். ஆர். சீனிவாசன் எழுதிய post card.

எழுத்தாளர்  *கிராஜாராயணனின் 29-4- 1950 இல், 74 ஆண்டுகளுக்கு முன் தனது நண்பர்  கம்யூனிஸ்ட் கட்சி  தோழர் நாலாட்டின் புதூர் என். ஆர். சீனிவாசன்...