Saturday, September 5, 2015

பேராசிரியர் அ.ராமசாமி- நாயக்கர் காலம் - இலக்கியமும் வரலாறும்

பேராசிரியர் அ.ராமசாமி தமிழகம் அறிந்த நுன்மான் நுழைபுலம் கொண்ட ஆளுமை. 
வரலாறு, தமிழ் இலக்கியம் மட்டும் இல்லாமல் ஆங்கில இலக்கியத்திலும் நிறைந்த ஆற்றலும் புலமையும் பெற்றவர்,வார்சா பல்கலகழகம், புதுவை பல்கலைகழகம், மதுரை பல்கலைகழகம் என பல கலாசாலைகளில் பணியாற்றினார், தற்போது திருநெல்வேலி மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைகழகத்திலும் துறைத் தலைவராகவும்,மூத்த பேராசிரியராகவும் பணியாற்றுகிறார். நல்ல பன்பாளர்.
அவர் எழுதிய நாயக்கர் காலம் - இலக்கியமும் வரலாறும் என்ற நூல் தமிழக வரலாற்றை ஆய்வு செய்து எழுதப் பட்டது. உயிர்மை பதிப்பகம் வெளியிட்ட இந்த நூலை தற்போது என்.சி.பி.எச் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அந்த நூலைப் பற்றி முன்னுரையில் பேரா. தி.சு.நடராசன் எழுதியுள்ள செய்திகள் :
Radhakrishnan KS's photo.இந்த நூல் இப்படித் தருக்கமுறையில் வரலாற்றைச் சொல்லிச் செல்கிறது. இதிலே காலங்களின் இயங்குநிலைகளோடு கூடிய வரலாறு இருக்கிறது. மன்னர்களின், பாளையங்களின் வாரிசுரிமைகளும் அதிகாரப்பகிர்வுகளோடும் கூடிய அரசியல் இருக்கிறது. சாதிகளாகவும், வலங்கை - இடங்கையாகவும், வேளாண்குழுக்களாகவும், வாணிகக் குழுக்களாகவும், சேவைக்குழுக்களாகவும் கட்டமைந்து கிடந்த சமூக அமைப்பு இருக்கிறது. குடும்பம், பெண், நிலப்பாகுபாடு, கல்வி , கலை முதலியவை உள்ளிட்ட பண்பாட்டுத் தளம் இருக்கிறது. நிலமானியங்கள், பண்ணை உற்பத்திமுறை, கைத்தொழில், வாணிகம் உள்ளிட்ட பொருளாதாரம் இருக்கிறது. மொத்தத்தில், தமிழகத்தில் நாயக்கர்காலத்தின் பன்முகப்பட்ட பரிமாணங்களைக் காணுகிறோம். நுணுக்கமான விவரங்களும், இயங்குநிலைகளோடு கூடிய நிகழ்வுகளும் அவற்றின் எதிர்வினைகளும், வெறுமனே நீள்படுக்கையாக அல்லாமல் விமரிசனத்தோடு எடுத்துரைக்கப்படுகின்றன.
இந்த ஆராய்ச்சிக்கு, இலக்கியங்களே மூலாதாரம். பின்னிடைக் காலத்து மொழியையும் அதன் பொருண்மையையும் உள்நுழைந்து வாசிப்புச் செய்தால் தெரியும், இது எவ்வளவு சிரமமானது என்று. இந்த மொழிக்கிடங்குக்குள் ஆழந்தெரியாமல் காலை விடக்கூடாதுதான். ஆனால் முத்துகளும் பவழங்களும் ஆழத்துக்குள் தானே படிந்து கிடக்கின்றன. ஆழங்கால் படுவது ஆராய்ச்சியின் அறைகூவல். அதனை அ.ராமசாமி ஏற்றுக்கொண்டு, இந்த இலக்கியங்களில் மூச்சடக்கி மூழ்கி முத்துக்களை வாரியெடுத்துத் தந்திருக்கிறார்.
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
05-09-2015.
‪#‎நாயகர்‬ காலம் - இலக்கியமும் வரலாறும்
‪#‎naickers‬
‪#‎Prof‬.A.Ramasamy
‪#‎KsRadhakrishnan‬
‪#‎KSR_Posts‬

No comments:

Post a Comment

‘’*தூக்குக்கு தூக்கு*’’

‘’*தூக்குக்கு தூக்கு*’’                இராண்டாம் பதிப்பு வெளிவருகிறது.