Thursday, June 16, 2016

செண்பகவல்லி அணையை சீர் செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

செண்பகவல்லி அணையை கேரள அரசு இடித்ததை குறித்து நேற்றைய (15 ஜூன் 2016) சங்கரன்கோவிலில் விவசாயிகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் அணுஉலை எதிர்ப்பு இயக்கத்தின் தலைவர் சுப. உதயகுமார், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சர் ச. தங்கவேலு, பொங்கலூர் மணிகண்டன் மற்றும் அடியேனும் கலந்துகொண்ட செய்தியும், என்னுடைய ஆர்ப்பாட்ட உரையும் இன்றைய தி இந்து நாளிதழ் (16.06.2016) வெளியிட்டுள்ளது.

செண்பகவல்லி அணையை சீர் செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்



திருநெல்வேலி மாவட்டம் வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதிகளில் வேளாண்மை மற்றும் குடிநீருக்கு ஆதாரமான செண்பகவல்லி தடுப்பணை உடைப்பை சரிசெய்ய வலியுறுத்தி, சங்கரன்கோவிலில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்திய உழவர் உழைப்பாளர் கட்சி, தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெற்ற இப்போராட் டத்துக்கு இந்திய உழவர் உழைப் பாளர் கட்சித் தலைவர் ஓ.ஏ.நாராய ணசாமி தலைமை வகித்தார். மாநிலங்களவை உறுப்பினர் தங்க வேல், வழக்கறிஞர் கே.எஸ்.ராதா கிருஷ்ணன், அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங் கிணைப்பாளர் சுப.உதயகுமார், தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் மணிகண்டன், கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் ஆர்.வி.கிரி ஆகியோர் பேசினர்.

வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் பேசியதாவது:

பாசன வசதி

செண்பகவல்லி தடுப்பணை பிரச்சினை, இப்பகுதி மக்களின் ஜீவாதாரப் பிரச்சினையாகும். ஆனால் தமிழக, கேரள அரசுகள் இந்த விஷயத்தில் அக்கறை செலுத்தவில்லை. ஏற்கெனவே உள்ள அணையில் 30 அடி வரை உடைந்துள்ள பகுதியை மட்டும்தான் கட்ட வேண்டும். கடந்த 45 ஆண்டுகளாக இந்த கோரிக்கையை நிறைவேற்ற இப்பகுதி மக்களும் விவசாயிகளும் போராடுகிறார்கள். ஆனால் ஆட்சியாளர்கள் இத்திட்டத்தை நிறைவேற்றவில்லை.

அணை உடைப்பு சீரமைக்கப் பட்டால் வாசுதேவநல்லூர் பகுதியில் 15 குளங்கள், சிவகிரி பகுதியில் 33 குளங்கள் வழியாகவும், சங்கரன்கோயில் வட்டத்தில் நேரடி பாசனத்தின் வழியாகவும் ஏறத்தாழ 11 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு பாசன வசதி பெறும் என்றார் அவர்.

சுப உதயகுமார் கூறும்போது, `செண்பகவல்லி தடுப்பணை அணை உடைப்பை சரிசெய்ய நீதிமன்றம் உத்தரவிட்டும், கேரள அரசு அதை நிறைவேற்ற முன்வரவில்லை. தமிழகத்தின் நீராதாரங்களை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்றார் அவர்.

http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/article8735637.ece

No comments:

Post a Comment

*What lies behind you and what lies before you are tiny matters compared to what lies within you*.

*What lies behind you and what lies before you are tiny matters compared to what lies within you*. Believe in yourself. You know personal de...