Sunday, June 12, 2016

பார்த்தீனியா.,,,

பார்த்தீனியா..

வெளிநாட்டிலிருந்து கோதுமை இறக்குமதி செய்தபோது இந்தியாவிற்கு திட்டமிட்டே கலந்து விடபட்டவிஷ விதை..

ஒரு பூவிலிருந்து ஆயிரக்கணக்கானாவிதைகள் காற்றில் பரவுகிறது.. ஒருமுறை முளைத்தால் அதன் வீரியம்கால் நூற்றாண்டுவரை நீடிக்கும்..

இந்த பார்த்தீனியம் வீட்டை சுற்றி வளர்ந்து கிடந்தால் குழுந்தைகளுக்குதீராத சளி,பெரியவர்களுக்குதும்மல் போன்ற பிரச்சனைகள் இருந்து கொண்டே இருக்கும்.

இந்த விஷ செடியை பரப்பியதே நம் பாரம்பரிய கொழிஞ்சி செடியை அழிப்பதற்காதத்தான்..

இந்த விஷச்செடியை அழிக்க களைக்கொல்லியை நம் விவசாயிகள் தெளிக்கின்றனர்..

அப்படி தெளிக்கும் போது அழிவது கொழிஞ்சி மற்றும் வரப்புகளில் இருக்கும் அருகம்புல் போன்றைவையும்தான்..

இப்படி தொடர்ச்சியாக களைக்கொல்லிகளை தெளித்து வந்தால் வரப்புகளில் இருக்கும் அருகம்புல் அழிந்து வரப்பு வழுவை இழந்துமழை பொழியும் போது வரப்பு மண்ணையும் மழை நீருடன் அடித்துக்கொண்டு   போய்விடுகிறது..

மாறாக பார்த்தீனியம் இந்த களைக்கொல்லிகளால் விதைகள் வீரியம் பெற்று ஆரோக்கியமாக வளர்கிறது..

பத்து லிட்டர் தண்ணீரில் ஐந்து கிலோ கல் உப்பை கரைத்து பிறகு பூ பிடித்திருக்கும் பார்த்தீனிய செடி மீது தெளித்தால் அது முற்றிலும் கருகிவிடுவதுடன் அதனுடைய விதைகளும் வீரியம் இல்லாமல் போய்விடுகிறது..

ஒரு கிலோ உப்பு மூன்று ரூபாய் என்பதால் இதற்கு செலவும் குறைவு..

வேறு எதுவும் இதனுடன் கலக்கத்தேவையில்லை..

தெளித்து அடுத்து ஒரு மணி நேரத்தில் காய்ந்து விடுகிது.

அடுத்த சில தினங்களில் முற்றிலும் காய்ந்து விடுகிறது..

No comments:

Post a Comment

*What lies behind you and what lies before you are tiny matters compared to what lies within you*.

*What lies behind you and what lies before you are tiny matters compared to what lies within you*. Believe in yourself. You know personal de...