Tuesday, June 13, 2017

புறக்கணிக்கப்படும் தென்தமிழகம்

புறக்கணிக்கப்படும் தென்தமிழகம்
-----------------------------------
மதுரையில் அமைக்கப்படும் என உறுதியளிக்கப்பட்ட  ஏய்ம்ஸ் மருத்துவமனை தஞ்சாவூர் நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கின்றது. தென் மாவட்டங்கள் முற்றிலும் புறக்கணிக்கப்படுகின்றன. 

*மதுரையில் ஐ.ஐ.டி கிடையாது 
*மதுரையில் மத்திய பல்கலைக் கழகம் கிடையாது. 
*மதுரையில் போடப்பட்ட அகல ரயில்பாதைகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளன. ஆங்காங்கே ரயில் பாதைகள் போடாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

மதுரை - போடிநாயக்கனூர் ரயில் மார்க்கம் நிலுவையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

மதுரை- தூத்துக்குடி விமான போக்குவரத்து மேம்படுத்தப்படும் என  அறிவிக்கப்பட்டதுடன் சரி, நடவடிக்கைகள் இல்லை. 

தூத்துக்குடி - குளைச்சல் துறைமுகத்தை பாழ்படுத்தும் நோக்கத்தில் மத்திய அரசு இலங்கை அரசுடன் ஒப்பந்தமிட்டு கொழும்பு துறைமுகம், கிழக்கு முனையத்தை விரிவாக்கம் செய்கின்றது. இதனால் தென்தமிழகத்தின் தூத்துக்குடி துறைமுகம் பாதிப்புக்கு உள்ளாகும்.

இவ்வாறாக பல்வேறு திட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதை ஏற்கேனவே சமூக வளைதளத்தில் நான் பட்டியலிட்டு உள்ளேன். 

இப்படியாக தென்தமிழகத்திற்கு அறிவிக்கப்பட்ட திட்டங்களை புறக்கணிப்பதும், கிடப்பில் போடுவதும் மதிய,மாநில அரசுகளின் மாற்றாந்தாய் மனப்பான்மையாகாதா? மக்கள் பொறுத்துக் கொள்வார்களா? 

மத்திய மாநில அரசுகளின் போக்கு இப்படியே தொடர்ந்தால் மதுரையை தலைமையிடமாக கொண்டு தென்தமிழகம் என்ற கோஷம் எழுவதை தடுக்கமுடியாது. 

#தென்தமிழகம்
#ஏய்ம்ஸ்மருத்துவமனை 
#மதுரை #தென்தமிழகமாவட்டம்
#குளைச்சல்துறைமுகம்
#KSradhakrishnanpostings 
#KSRpostings 
கே.எஸ்.இராதாகிருஷ்ணன் 
13-06-2017


No comments:

Post a Comment

#கனவாகிப் போன கச்ச தீவை

இன்றைய (12-5-2024)தினமலரில்….