Sunday, June 25, 2017

காதலுக்கு கண் இல்லை

காதலுக்கு கண் இல்லை 
கிருபாளினி-சுசேதாகிருபாளினி,
சுரேந்திரமோகன்,
யாசர் அரபாத்- சுஹா தாவித் 
ஜோர்டான் மன்னர்ஹூசேன் -லிசா
----------------------------------
காதலுக்கு கண் இல்லை என்பார்கள் உண்மை தான் ஆனால் கண்மூடித் தன்மையுடன் வந்தால் அது காதலும் இல்லை.  இருமனங்களுக்கு இடையே காதல் வந்தால் அதற்கு அழகு , வசீகரம் என ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். அது மட்டுமின்றி ஒற்றை இலட்சியம் , போராட்டக் களத்திலும் காதல் மலர்வது உண்டு. இதற்கு எடுத்துக்காட்டாக திராவிடர்   இயக்கத்தில், கம்யூனிஸ்ட்களில் சில பெயர்களை  சொல்லலாம்.  
 


பாலஸ்தீன விடுதலை இயக்க நிறுவனர்
யாசர் அரபாத் தனது அறுபத்தி ஏழாவது வயதில் சுஹா தாவித் எனும் கிருத்துவ, ஆங்கிலேயே  பெண்ணை திருமணம் செய்துக் கொண்டார். 

ஜோர்டான் மன்னர்ஹூசேன் , லிசா
எனும் அமெரிக்கன் கிருத்துவ பெண்மணியை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். லிசா என்ற  பெயரை நூர் எனவும்
மாற்றிக்கொண்டார் 

சோஷலிஸ்ட் மூத்த தலைவரான சுரேந்திரமோகன் 58 வயதை நெருங்கும் அவரை ஏறத்தாழ 25வயது மதிக்கத்தக்க, மிக அழகான சகோதரி  ஒருவருக்கு  அவர் மீது ஈர்ப்பு எற்பட்டு, அவரைத் துரத்தி காதலித்து கரம் பிடித்தார்.  அவரது மனைவி சுரேந்திரமோகன் அவர்கள் மீது கொண்டது அறிவு சார்ந்த ஈர்ப்பு  அதன் வளர்ச்சி காதல் வடிவமானது. 

இதில் குறிப்பிடத்தக்க காதலர்கள் என்றால் அது ஆச்சார்யா கிருபாளினி - சுசேதா கிருபாளினி தான். ஆச்சார்யா கிருபாளினியின் புத்திக் கூர்மை, அறிவாற்றல் , இலட்சியம் ஆகியவற்றால் ஈர்ப்பு ஏற்பட்டு சுசேதாவை விட முப்பது வயது முதியவரான ஆச்சார்யா கிருபாளினியை காதலித்து பல்வேறு எதிர்ப்புக்களை எதிர்கொண்டு திருமணம் செய்துக் கொண்டார். 

இவர்கள் ஒருவரை ஒருவர் காந்தியடிகளுக்கு தெரியவந்தது. இருவரும் காந்தியடிகளை சந்தித்தனர். சுதந்திர போராட்டத்தில் பங்கு கொண்டிருக்கும் நீங்கள் இருவரும் திருமணம் செய்துக் கொள்வதாக அறிந்தேனே என்றார்.  ஆம் என கிருபாளினி பதில் அளித்தார். சுதந்திரத்திற்கு முன்னர் திருமணம் செய்துக் கொள்ள மாட்டேன் என உறுதி எடுத்துக் கொண்டது நினைவிருக்கின்றதா என காந்தி கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த கிருபாளினி சுதந்திரத்திற்கு முன்னர் திருமனம் செய்துக் கொள்வோம் என நாங்கள் சொல்லவில்லையே என்றார். ஆனால் சுதந்திரத்திற்கு முன்னதாகவே 1936ல் இருவரும் திருமணம் செய்துக் கொண்டனர்.

மேற்காணும் இவர்களது காதல் கொள்கை, புலமை, சிந்தனை, இலட்சியம் என்ற ஒற்றைப்புள்ளியில் இணைந்த காரணத்தால் உலகம் இவர்களை விமர்சிக்கவில்லை.

 ஆனால் ஜாக்குலின் கென்னடி பணம், ஆடம்பரம்,  தீவு, சொத்துக்களுக்கு  ஆகியவைகளுக்கு ஆசைப்பட்டு காதல் என்ற போர்வையில் பேராசையின் காரணமாக  ஒனாசிஸை திருமணம் செய்துக் கொண்டர். பின்னர் ஜாக்குலின் கென்னடி புற்றுநோய்க்கு ஆளாகி மரணித்தார். அப்போதும் பரிதாபப்ட்டார்கள்ன் தவிர காதலை ஏற்றுக் கொள்ளவில்லை. இளைய கென்னடி மற்றும் மகளுடன் இறுதிகாலத்தை கழித்து இருக்கலாமே , இன்னொரு திருமணம் தேவையா என  உலகத்தாரால் பெரிதும் விமர்சிக்கப்பட்டது.

#அறிவுப்பூர்வமானகாதல்
#ஆச்சார்யாகிருபாளினி
#சுசேதாகிருபாளினி
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
25-06-2017

No comments:

Post a Comment