Sunday, June 4, 2017

வாழ்க்கை

வாழ்க்கை என்பது கண்ணீரும் மகிழ்ச்சியும் பொங்க நீண்டு இழுபடும் கதை. அது கல் நெஞ்சக் காலத்தின் நெஞ்சில் படபடக்கும் எழுதப்படாத ஓலைச்சுருளைப் போன்றது. மரணத்தை நோக்கிச் செல்லும் பயணி எல்லாவற்றையும் தனக்குப் பின்னால் விட்டுச் செல்வதைப் போல்! அப்படியே நாம் கற்பனை செய்தாலும் நமக்குப் பின்னால் அவன் எதையும் விட்டுச் செல்வதில்லை. இந்த அழியும் உடல்தான் எஞ்சி நிற்கிறது. அதுகூட அவனுக்குச் சொந்தமில்லை. அவன் உயிர்  பறந்து விடுகிறது என்றுதான் அது. அவனுக்கு அது சொந்தமாக இருந்தது.
 

வாதத்திற்கு, ஆரம்பமும் இல்லை; முடிவும் இல்லை. கடல் குறைவதுமில்லை; கூடுவதுமில்லை; சூரியன் உதிப்பதுமில்லை; மறைவதுமில்லை. உன் நெஞ்சின் ஆசைகள் நிறைவேறுவதுமில்லை; வீணாவதுமில்லை. நம் உறவுக்குக் கூட பெயருமில்லை; முடிவுமில்லை. எனவே இந்தப் பொருளற்ற கடிதத்தில் எந்த தீர்மானமான முடிவை நான் குறிப்பிட முடியும்? வாழ்க்கைச் சம்பவங்கள் அனைத்தையும் சொல்லி முடித்த பின்னாலும் கடைசிச் சொல் பெரும்பாலும் சொல்லாமல் விடப்பட்டு விடுகிறது. அனைத்தையும் அடைந்தும்கூட, மனநிறைவு  கிட்டுவதில்லை. எல்லாம் முடிந்த பிறகும், மங்கலத் தொடக்கம் நீடிக்கவே செய்கிறது. எதன் தொடக்கம், யாருடைய முடிவு? எது படைப்பு என்பதே ஒரு வகை அழிவுதான். தொடக்கம் என்பதே முடிவும்தான். அதுவே வலிமை மிக்க காலம். அழிவற்றதும் எல்லையற்றதுமான காலம். நிரந்தாமானது; முடிவில்லாதது.

மலர்களினின்று மணத்தைச் சுமந்து தென்றல் செல்வதைக் கண்டு நான் வியக்கிறேன். எதன் வாசத்தில் மயங்கி உயிர் உடலை விட்டு நீங்குகிறது? அது எங்கே போகிறது? எங்கிருந்து வருகிறது?

#வாழ்க்கை
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே எஸ்.இராதாகிருஷ்ணன்
04-06-2017

No comments:

Post a Comment

#கனவாகிப் போன கச்ச தீவை

இன்றைய (12-5-2024)தினமலரில்….