Wednesday, June 7, 2017

சமூகம் புறக்கணித்தவற்றை கைவிடு.

படித்ததில்ரசித்தது
எல்லோரும் என்னைக் கேலி செய்கிறார்கள் என்று வருத்தப்பட்டு எழுதிய இளைஞர் ஒருவருக்கு, அறிவுரை அற்புதமானது...
1. புத்தகங்களை துணை கொள்.
2. உடலுழைப்பை அதிகரி.
3. சமூகம் புறக்கணித்தவற்றை கைவிடு.
4. குளிர் நீரில் குளி.
5. கொஞ்சமாய் சாப்பிடு.
6. தியானம் கைகொள்.
7. இறவு உறங்கும் முன் நெடுந்தொலைவு நட.
8. உடுப்பில் வெள்ளை நிறத்தைப் பழக்கமாக்கு.
9. உணவில் கீரை சேர்த்துக் கொள்.
10. எத்தனை வலித்தாலும் அழாதே. சிரி.
11. ஆத்திரம் அகற்று.
12. கேலிக்கு புன்னகை தா.
13. கோபத்திற்கு மௌனத்தைக் கொடு.
14. நட்புக்கு நட்பு செய்.
15. வேலை சொல்லித் தருபவரிடம் மிகப் பணிவாக இரு.
16. அலட்சியப் படுத்தினால் விலகி நில்.
17. அன்பு செய்தால் நன்றி சொல்.
18. இதமாகப் பேசு.
19.வீணான வைராக்கியங்களை சுமப்பதால் இதயத்தில் வீண் வடுக்கள் தான் உருவாகும்..
20.மதியாதார் தலைவாசல்  மிதியாதே ....
21.காயப்படுத்தியவர்களை
கடந்து போகும் சூழல் வந்தால்
புன்னகைத்துவிட்டு செல்லுங்கள்..
கன்னத்தில் அறைவதை விட 
அதிகம் வலிக்கட்டும்.
22..மற்றவர்களை காயப்படுத்தும் புன்னகையைவிட,யாரையும் கஷ்டப்படுத்தாத மவுனம் சிறந்தது.

.
 

No comments:

Post a Comment

#மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது கடிதம்

#மாண்புமிகு  முதல்வர்  மு.க.ஸ்டாலின்         அவர்களுக்கு எனது கடிதம் ———————————————————- கே. எஸ் . இராதா கிருஷ்ணன்  முகாம் - குருஞ்சாக்குளம...