Wednesday, October 18, 2017

தெற்கிலிருந்து ஒரு சூரியன்.

தி இந்து தமிழ் நாளிதழ் தெற்கிலிருந்து ஒரு சூரியன் என்ற தலைப்பில் திராவிட இயக்கம், இந்த இயக்கத்தை அண்ணாவுக்கு பின் சோதனையான காலகட்டத்தில் தலைமையேற்று நடத்தி தொடர்ந்து 60 ஆண்டுகள் தோல்வியில்லாமல் சட்டமன்றத்துக்கு சென்று சாதனை புரிந்த தலைவர் கலைஞரை குறித்தான ஒரு சிறப்பு மலரை வெளியிடுகின்றது.


அந்த மலரில் திராவிட மூத்த தலைவர்களாக தற்போது திகழ்கின்ற முன்னாள் அமைச்சர் செ. மாதவன், கி. வீரமணி போன்ற பலர் தங்களுடைய பங்களிப்பை அளித்துள்ளனர். திமுக செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின், தலைவர் கலைஞரோடு 24 மணிநேரமும் இருந்த அவருடைய தனிச் செயலாளர் சண்முகநாதன், போராசிரியர். நாகநாதன், கனிமொழி போன்ற பலரும் இந்த மலருக்கு தங்களுடைய பேட்டிகளையும், படைப்புகளையும் அளித்துள்ளனர்.

அது மட்டுமல்லாமல், வடபுலத்தை சேர்ந்த அமர்த்தியா சென், டேவிட் ஷுல்மன், பிரேர்ணா சிங், யோகேந்திர யாதவ், பால் சக்காரியா, சித்தலிங்கையா எனப் பல ஆளுமைகளும் தங்களடைய திராவிட இயக்கத்தை குறித்தும் கலைஞரை குறித்தும் தங்களுடைய பத்திகளை அளித்துள்ளனர். அடியேனும் கலைஞரின் விசாலப் பார்வை என்ற தலைப்பில் ஒரு பத்தியை அளித்துள்ளேன்.

இந்த மலர் இன்னும் நான்கைந்து நாட்கள் கழித்து வரும் திங்கள்கிழமை (23/10/2017) அன்று வெளிவர இருக்கிறது. இம்மலர் வெளிவந்த பின் தங்களுடைய கருத்துக்களையும் விமர்சனங்களையும் தாராளமாக வைக்கலாம்.

படைப்புகள், எழுத்துகளை குறித்து பேச ஜனநாயகத்தில் அனைவருக்கும் உரிமையுண்டு. இதில் மாற்றுக் கருத்து கிடையாது.

குழந்தை பிறப்பதற்கு முன், ஆணா? பெண்ணா? என்று தெரியாத போது என்ன பெயர் வைப்பதென்ற சர்ச்சையை எழுப்புவதை போன்று இது இருக்கின்றது. நூல் வரட்டும். வாசித்து புரிதலான பின்பு எல்லோருடைய கருத்தும் பொது தளத்தில் வழங்குவதை யாரும் குறைசொல்லமாட்டார்களே. அதுவரை காத்திருக்கலாமே !...


இதை குறித்து இந்த மலரை தயாரித்த தி இந்து ஆசிரியர் குழு பொறுப்பாளர் சமஸ் Samas தன்னுடைய முகநூலிலும் இதற்கான பதிலையும் அளித்துள்ளார். 



பாரதியின் வரிகளுக்கேற்ப, ‘தெளிவுறவே அறிந்திடுதல், தெளிவுதர மொழிந்திடுதல், சிந்திப்பார்க்கே’…


இந்த மலர் வெளிவரும் முன்னே என்னவென்று அறியாமலே எதிர்வினையாற்றுவது நியாயம் தானா?


புத்தகம் வெளிவரட்டுமே...


#தெற்கிலிருந்துஒருசூரியன்

#தி_இந்து
#திராவிட_இயக்கம்
#கலைஞர்
#KSRadharkrishnanPostings
#KSRPostings
கே. எஸ். இராதாகிருஷ்ணன்.

18-10-2017

No comments:

Post a Comment

வேலுப்பிள்ளை பிரபாகரன்- Velupillai Prabhakaran

https://youtu.be/WrNmTFAoFw8?si=xJMjMucIKPf6JUWQ