Sunday, October 15, 2017

விவசாயிகளின் தற்கொலைகள்

கடன் தொல்லையால் விவசாயிகளுடைய தற்கொலைகள் கடந்த இருபது ஆண்டுகளில் ஏறத்தாழ ஐந்து லட்சங்களாக எட்டிவிட்டதாக செய்திகள். கடந்த 2016 - 2017 ஆண்டுகள் புள்ளிவிபரப்படி மொத்தம் 6667 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். இதில் மத்திய பிரதேசத்திலும் 1,982 பேர், தமிழகத்தில் 200 பேர். தமிழகத்தில் இந்த தற்கொலைத் துயரங்கள் 2012ல் இருந்து ஏற்பட்டது. சராசரியாக ஆண்டுதோறும் 12,000 த்திற்கும் அதிகமானனோர் தற்கொலை செய்துக் கொண்டதாக தேசிய குற்றப்பதிவு ஆவணங்கள் சொல்கிறது. 2015ல் மகாராஷ்ட்டிராவில் 3,030 விவசாயிகள். மகாராஷ்ட்டிராவில் தான் அதிகமாக நடக்கின்றன. 
குறிப்பாக நாக்பூரை ஒட்டியுள்ள விதர்பாவில் தான் அதிகம். ஆந்திரம், தெலுங்கானா, கர்நாடகம், குஜராத், மத்திய பிரதேசம், சட்டீஸ்கார், உத்திரப்பிரதேசம், ராஜஸ்தானை தொடர்ந்து விவசாயிகளின் தற்கொலைகள் நடந்த வண்ணம் உள்ளன. நாட்டில் 80% விவசாயிகள் கடனை திருப்பி செலுத்த முடியாமல், வாழ வழியில்லாமல், தங்களுடைய கண்ணியத்திற்கு குந்தகம் ஏற்பட்டு விடுமோ என்று தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 

வங்கி அதிகாரிகள் மற்றும் வருவாய்த் துறையினரின் குடைச்சல் தாங்காமல் வாழப் பிடிக்காமல் விவசாயிகள் தங்களின் இன்னுயிரை தியாகம் செய்கிறார்கள். என்ன செய்ய? இயற்கையின் அருட்கொடையான மழையும் விவசாயிகளை சோதிக்கின்றது. ஆளவந்தவர்களும் விவசாயிகளை ரணப்படுத்துகின்றனர்.

சிந்துபாத் கதை போன்று இவைகள் தொடர்கின்றன. இதற்கு எப்போது விடியலோ???

#விவசாயிகள்_தற்கொலை
#Farmers
#Agriculturaist
#KSRadharkrishnanPostings
#KSRPostings
கே. எஸ். இராதாகிருஷ்ணன்.
14/10/2017

No comments:

Post a Comment

வேலுப்பிள்ளை பிரபாகரன்- Velupillai Prabhakaran

https://youtu.be/WrNmTFAoFw8?si=xJMjMucIKPf6JUWQ