Wednesday, October 4, 2017

யார் வேண்டுமானாலும் அரசியலில் குதிக்கலாம்

காவேரி, முல்லைப் பெரியாறு போன்ற நீராதாரப் பிரச்சனைகள், மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவது, கச்சத்தீவு, நெடுவாசல், கதிராமங்கலம், விவசாயிகள் பிரச்சனை எனப் பல தமிழகத்தை வாட்டும் அடிப்படை பிரதானப் பிரச்சனைகள் முக்கியமல்ல. 

மக்கள் விரும்பினால் நான் வருவேன், அவர் வருவார். இன்னும் மறைந்த நாட்டியப் பேரொளி பத்மினி, நடிகையர் திலகம் சாவித்திரி, டி.எஸ்.பாலையா போன்றவர்கள் எல்லாம் மக்கள் விரும்பினால் நம்மிடம் தோன்றி முதல்வராகி நம்மை இரட்சிப்பார்கள் போன்ற பயனற்ற செய்திகள் தான் முக்கியத்துவமாகவும் அவசியமாகவும் எடுத்துக் கொள்கிறோம்.

யார் வேண்டுமானாலும் அரசியலில் குதிக்கலாம், கடலில் குதிக்கலாம், கிணற்றில் குதிக்கலாம். அதனால் தமிழகத்திற்கு என்ன பலன் என்று சிந்திக்க நேரமில்லை. ஏனெனில் தொலைக்காட்சிகளையும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளிலேயே நம்முடைய கவனம் 24 மணிநேரமும் அலை பாய்கிறது. 

வாழ்க இந்த மண் !!!

#நாட்டின்_முக்கிய_பிரச்சனைகள்


#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
04-10-2017

No comments:

Post a Comment

கதைசொல்லி.

*கதைசொல்லி 34 ஆம் இதழ் விரைவில் வெளி வருகிறது*. *பொதிகை- பொருநை-கரிசல்* #* * #கேஎஸ்ஆர்போஸ்ட்  #ksrpost 15-5-2024.