Tuesday, August 21, 2018

யாருக்கோ என்று இல்லாமல்…

யாரையும் இங்கே குறிப்பிட வில்லை.
இந்த போக்கு கூடாது என்பது தான் நோக்கம்//
இது உண்மைதானா என்பதையும் சில சமூக நல இயக்கங்கள் / நல்ல நண்பர்கள் சோதித்து மெய்ப் பொருள் காண்பது அவசரம் அவசியம்.//

யாருக்கோ என்று இல்லாமல்…
---------------------

தினமும் டெல்லி இந்துஸ்தான் டைம்ஸ், பயோனீரில் இருந்து தமிழக பத்திரிக்கைகள் வரை ஒரு டஜன் தினசரிகளை படிப்பது வாடிக்கை. கடந்த சில காலங்களாக கவனித்து வருகிறேன். சில தமிழ் ஏடுகள், ஊடகங்களில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த செய்தியாளர்கள் அவர்களது சமூகத்தைச் சார்ந்தவர்களை எந்தக் கட்சியில் இருந்தாலும், தூக்கிப் பிடித்து எழுதுவது வாடிக்கையாக இருக்கிறது என செய்தித்தாள்களை புரட்டும் போதே மனதில் படுகின்றது. இந்த போக்கு யதார்த்தமில்லாமல் உள்ளது. இது ஆரோக்கியமான நிலைதானா? யாரையும் புண்படுத்துபவர்களுக்காக இந்த பதிவல்ல. இருக்கின்ற நிலைமையை சொல்வதில் கடமையும், பொறுப்பும் உள்ளது. 

இது உண்மைதானா என்பதையும் சில சமூக நல இயக்கங்கள் / நல்ல நண்பர்கள் சோதித்து மெய்ப் பொருள் காண்பது அவசரம் அவசியம்.

ஆரோக்கியமான பொதுவாழ்வைக் கருதி சொல்ல வேண்டியது கடமை என்றுபட்டது. பலூன்களில் காற்று ஊதி பறக்கவிட்டாலும் அது சில காலம் மட்டுமே. நிரந்தரமாக பறக்காது. யாருக்கோ என்று இல்லாமல் பொதுத் தளமும், களமும் புரையோடிப் போகக் கூடாதே என்று கவனிக்க வேண்டியது கடமையல்லவா?
இப்படியாக சிலர் இருப்பதால் எந்தவிதமான அரசியல் களப்பணிகளிலும் ஈடுபடாமல், திடீரென்று அரசியலுக்கு வருபவர்களுக்கு ஊடக வெளிச்சம் எளிதாகக் கிடைக்கிறது. இவர்கள் திடீர் அரசியலில் வலம் வரும் வேடிக்கை மனிதர்களாக உள்ளனர். பொது வாழ்வில் இப்படியான காட்சிப் பிழைகளும் நடக்கின்றன.

#ஊடகத்துறை
#Press
#KSRadhakrishnan_Postings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
21-08-2018

No comments:

Post a Comment

#கனவாகிப் போன கச்ச தீவை

இன்றைய (12-5-2024)தினமலரில்….