Sunday, September 2, 2018

அடங்கா ஆசைகளும், வெறுப்புகளும் மனதை கடினமாக்குகிறது.

வாழ்க்கையில் பயம் ஏற்படக் காரணம் பொறுப்புணர்வுக் குறைவே. அதனால் மனக்குழப்பங்கள். நேர்மையான செய்யவேண்டிய கடமைகளை ஆற்றினால் அச்சமும், குழப்பமும் நம்மை அண்டாது. எளிமையும் முக்கியம். பகட்டினாலும் நமக்கு விடுதலை கிடைப்பதில்லை. எளிமையில் செருக்கோடு வாழ்வது தான் நிம்மதி.
எளிமை என்றால் அடிப்படைத் தேவைகள் இல்லாமல் வாழச் சொல்லவில்லை. எளிமை என்பது தேவைகளை பூர்த்தி செய்யும் மனநிலையோடு நேர்மையாக நடைபோடுவது தான். எளிமையும், பொறுப்புணர்வும், நேர்மையும் ஒரு முகமாக வாழ்க்கையில் அமைந்துவிட்டாலே நிம்மதியாக எந்த நோயும், நொடியும் இல்லாமல் பூமிக்கு வந்த நோக்கத்தை நிறைவேற்றலாம். அதுவே பேரின்பம்.
தாராள குணம், ஆக்கப்பூர்வமான அறைகூவல்கள், வாழ்க்கை நிச்சயமற்றது என்ற எச்சரிக்கை, அறநெறி பேணுதல் என்ற நோக்கங்களை இதயசுத்தியோடு பரிபூரணமாக ஒருவர் கொண்டு சென்றாலே எந்த கவலையும், எந்த குழப்பமும் அண்டாது. அடங்கா ஆசைகளும், வெறுப்புகளும் மனதை கடினமாக்குகிறது என்பதை ஒவ்வொருவருக்கும் இந்த புரிதல் ஏற்படவேண்டும்.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
02-09-2018

No comments:

Post a Comment