Tuesday, September 18, 2018

*என்ன வேடிக்கை மனிதர்கள்.* Non-Issues are Issues here. Issues are Non-Issues here.



அத்தியாவசியப் பிரச்சனைகள் நமக்கு முக்கியமல்ல.
அவசியமற்ற, சுயஇருப்பைக் காட்டும் பிரச்சனைகள் நமக்கு முக்கியம்.
————————————————-
ஸ்டெர்லைட் கூடாதென்று அனைத்து தரப்பினரும் போராடி, பல எதிர்ப்புகளுக்கும், இழப்புகளுக்கும் பின்னர் மூடப்பட்டது. இப்போது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுலகத்தில் தனித்தனியாக சென்று ஆலையை திறக்க கோரிக்கை வைத்து வருவது புதிராக உள்ளது. 

இதே போல தான் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற அனைத்து தரப்பினரும் போராடி வந்தபோது திட்டப்பணிகள் தொடங்கப்பட்டதும், அது சரியில்லை, இதனால் பிரச்சனை என்று தொலைநோக்குத் சேது சமுத்திர திட்டத்தில் இத்தகைய பிரச்சனைகளை உருவாக்கினர் . 
இப்படியிருந்தால் நியாயங்கள் எப்படி புலப்படும்.

தூத்துக்குடி மாவட்டம்,திருச்செந்தூர் அருகே கல்லாமொழியில் நிலக்கரி இறங்குதளம் அமைக்கக் கூடாதென்று மணப்பாடு, குலசேகரப்பட்டினம், வீரபாண்டியபட்டினம், புன்னைக்காயல் போன்ற பகுதிகளைச் சேரந்தவர்கள், மீனவர்கள் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுமென்று இத்திட்டத்தை எதிர்த்து ஆலந்தழையில் மனித சங்கிலிப் போராட்டத்தை நடத்தினர். நாளைக்கே,இப்பகுதி மக்களின் சிலர் வேலைவாய்ப்பு பாதிக்கப்படுமென்று இத்திட்டத்திற்கு ஆதரவாகவும் கிளம்புவர். 

*என்ன வேடிக்கை மனிதர்கள்.*
Non-Issues are Issues here.
Issues are Non-Issues here.
அத்தியாவசியப் பிரச்சனைகள் நமக்கு முக்கியமல்ல.
அவசியமற்ற, சுயஇருப்பைக் காட்டும் பிரச்சனைகள் நமக்கு முக்கியம்.

வேறென்ன சொல்ல முடியும். வாழ்க வையகம்!இது தான் நமது முன்னேற்றப் பாதை. போகிற போக்கில் நல்லது எது, தீங்கு எது என்று பகுத்தறிய முடியாத இந்த உலகில் நல்லது சொன்னால் வெறுக்கப்பட்டு, பைத்தியக்காரத்தனம் என்று சொல்லப்படுகிறது.

#KSRPostings
#KSRadhakrishnanPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
18-9-2018

No comments:

Post a Comment