Sunday, September 9, 2018

மனதை ஒருமுகப்படுத்துதல்...



--------------------------------
மனம் ஒரு குரங்கு என்பார்கள். மனதை ஒருமுகப்படுத்துவது எளிதான செயல் அல்ல. நுண்ணிய சக்திகளும், நுண்ணிய மாற்றங்களும் மனதளவில் இருப்பதால் அதை ஒருமுகப்படுத்துவது என்பது சிரமம் மட்டுமல்ல, அதற்கான ஆற்றலையும், மனவோட்டத்தையும் பெற வேண்டும். இந்த மனதை ஒருமுகப்படுத்தவில்லை என்றால் மனஇறுக்கம், கோபம், ஏமாற்றம், வேதனைகள் வருகின்றன. ஒரு முகமாக விரிவடைந்த மனம் மெய்ப்பொருளைக் கண்டால் தான் சமநிலை அடைந்து நிறைவு பெறும். 
அமைதியும், மனமகிழ்ச்சியும் மனதை ஓருமுகப்படுத்தினால் தான் உணர முடியும். 

பரந்த மெய்யுணர்வும், மெய்யுணர்வின் ஒவ்வொரு அங்கமும் சக்தி படைத்ததாக உள்ளது. பக்குவப்பட்ட மனநிலை எந்த துயரத்தையும், எந்த சிக்கலையும் எதிர்கொண்டு சமாளிக்கும். எளிமையே மனதை ஒருமுகப்படுத்துவதற்கு அடிப்படை காரணியாகும். பகட்டு, பொறாமை, ஆசைகள், தேவையில்லாத சர்ச்சைகள் புகுந்தால் மனது சீர்கெட்டு ஒருமுகமாக இல்லாமல் மானிடத்திற்கு அகப்புறச் சிக்கல்களைத் தந்து வாழ்க்கையே கேள்விக்குறியாக்கிவிடும்.

#வாழ்வியல்
#மனம்_ஒருமுகப்படுத்தல்
#Life
#KSRadhakrishnanpostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
09-09-2018.
(படம் - நெல்லை, நெல்லையப்பர் கோவில்)

No comments:

Post a Comment

*What lies behind you and what lies before you are tiny matters compared to what lies within you*.

*What lies behind you and what lies before you are tiny matters compared to what lies within you*. Believe in yourself. You know personal de...