Tuesday, October 16, 2018

*சிறியன சிந்தியாதான்*



------------
நாட்டின் தண்ணீர் தேவையை சரிசெய்வது எப்படி?
உலக வெப்பமயமாதலை எப்படி தடுப்பது?
ஜனத்தொகை பெருக்கத்தால் ஏற்படும் பெரும் சிக்கல்களை களைவது எப்படி?
கிடப்பில் போடப்பட்டுள்ள தமிழகத்தின் தலையாய திட்டங்களை செயல்படுத்த வைப்பது எப்படி என்பதையெல்லாம் விட்டுவிட்டு அன்றாட பொழுதுபோக்கு பிரச்சனைகளை மட்டும் பேசிக்கொண்டு பொதுதள அத்தியாவசிய பிரச்சனைகளை கண்டுகொள்ளாமல் செல்வதுதான் நேர்மையான, உண்மையான போக்கா?
கடந்த சில ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள். அதை குறித்தெல்லாம் அக்கறைபடாமல் சமூக வலைத்தளங்களில் #metoo, தாமிரபரணியில் புஷ்கரணி வேண்டுமா வேண்டாமா என்று விவாதங்களில் ஈடுபடுகிறோம். 
அது பிரச்சனைகள் தான். இல்லையெ கூறவில்லை. ஆனால் அது மட்டும்தான் பிரச்சனைகளா?

இப்படியான போக்கில் மக்கள் மனம் இருப்பதால்தான்; நமது நாடும் சரிவை நோக்கியே செல்கிறது. போலி பாசாங்குகள் தான் உண்மையென்றால் வேறென்ன செய்ய முடியும். பிம்பங்கள் தான் யதார்த்தம் என்றால் எவ்வளவு சொன்னாலும் எடுபடாது. 

போகிறபோக்கில் போங்கள்.
காவிரியில் தண்ணீர் வந்தால் என்ன, முல்லை-பெரியாறில் தண்ணீரை தேக்காமல் போனால் என்ன, கச்சத்தீவு போனால் என்ன, தமிழக மீனவர்கள் அடிபட்டு செத்தால் என்ன, விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டால் என்ன, சேலம் இரும்பாலையை தனியாருக்கு விற்றால் என்ன, நமக்கு வைரமுத்து - சின்மயி #metoo பிரச்சனையும், தாமிரபரணி புஷ்கரணியும், அவ்வப்போது நடக்கும் பருவ பொழுதுபோக்கு போன்ற பல பிரச்சனைகள் தானே முக்கியம்.
வாழ்க நமது நாடு. 
அந்த திரைப்படம் பல நற்கருத்துகளை போதிக்கிறது என்று பலர் கூறுகிறார்கள். ஏனென்றால் பேராசான் வள்ளுவன் குறள், ஓளவையின் ஆத்திச்சூடி, மூதுரை, நன்னெறி, நாலடியார், திரிகடுகம், சிலப்பதிகாரம் போன்ற நல்வழிப்படுத்தும் இலக்கியங்கள் இல்லாததை போன்று நமக்கு திரைப்படங்கள் மட்டுமே நல்லதை  போதிக்கிறது என்றால் என்ன சொல்ல......
சம்பதிக்க எடுக்கப்பட்ட திரைப்படங்கள்தான் சமுதாயத்தின் கண்கள் அது மடமைத்தனம்.பொய்யான போக்கும், நாம் எங்கு இருக்கிறோம், எப்படி இருக்கிறோம் என்பதை மறந்துவிட்டு, இப்படி பெரும் பாதிப்பு ஏற்படுவதை உணராமல் வாய்ச்சொல் வீரர்களாக இருக்கிறோம். 
பேச்சுகளை விட செயல்பாடுகள், களப்பணிகள் முக்கியம். இந்த பணிகளின் நீட்சிதான் நாட்டுக்கு விடியலை தரும் என்பதை உணரவும் மறுக்கிறோம்.
பாரதி எவ்வளவோ தீர்க்க சிந்தனையோடு பாடினால் நமக்கு என்ன? 

சிறியன சிந்தியாதான்...........

சிந்து நதியின் மிசை நிலவினிலே
சேரநன்னாட்டிளம் பெண்களுடனே
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து
தோணிகளோட்டி விளையாடி வருவோம்

கங்கை நதி புறத்து கோதுமை பண்டம்
கங்கை நதி புறத்து கோதுமை பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்

சிங்க மராட்டியர் தம் கவிதை கொண்டு
சேரத்து தந்தங்கள் பரிசளிப்போம்
சிங்க மராட்டியர் தம் கவிதை கொண்டு
சேரத்து தந்தங்கள் பரிசளிப்போம்

மனசுகி நீ கோபம் மனுதட நீ கோபம்
மனசுகி நீ கோபம் மனுதட நீ கோபம்
மமதாவேசம் மாயனி மது பாசம்
மமதாவேசம் மாயனி மது பாசம்
மனசுகி நீ கோபம் மனுதட நீ கோபம்

நீ கங்கண ராகம் ஆஆஆஆஆஆ நீமதி அனுராகம் ஆஆஆஆஆஆ
மனயீ வைபோகம் ஆஆஆஆஆஆ பகுஜன் மனயோகம் ஆஆஆஆஆஆ
வலபுல உல்லாசம் ஆஆஆஆஆஆ நரபுல தரஹாசம் ஆஆஆஆஆஆ
வதரின அவகாசம் ஆஆஆஆ தனிகுரு ஆதேசம் 
ஆஹாஹா ஆஹாஹா ஆஹாஹா ஆஹாஹா
ஆஹாஹா ஆஹாஹா ம்ஹ்ம்ம்ஹ்ம்

சிங்களத் தீவினுக்கோர் பாலமமைப்போம்
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்
சிங்களத் தீவினுக்கோர் பாலமமைப்போம்

வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்.

*கே.எஸ்.இராதாகிருஷ்ணன்*
15/10/2018

#KSRPostings
#KSRadhakrishnanPostings
(படம் வாரணாசி கங்கை தீரம்)

No comments:

Post a Comment

*Worrying is like sitting in a rocking chair*

*Worrying is like sitting in a rocking chair*. It gives you something to do but it doesn't get you anywhere.Worry is a total waste of ti...