Thursday, September 15, 2016

ஸ்ரீரங்கம்

ஸ்ரீரங்கம் கோயிலில் துலுக்கநாச்சியார்

டெல்லியை ஆண்ட பாதுஷா தமிழகத்திலும் தனது ஆளுகையை விரிவுபடுத்த எண்ணினார். திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் படைவீரர்களுடன் நுழைய முற்பட்ட போது, வாயிலில் காவலர்கள் தடுத்தனர். பெரும் போருக்குப் பின், தளபதி மாலிக்காபூர், கருவூலத்தை தாக்கி ஆபரணங்கள், தங்க நாணயங்கள் உள்ளிட்டவற்றை அள்ளிக்கொண்டார். அங்கு பிரகாசமாக ஜொலித்துக்கொண்டிருந்த உற்சவர் நம்பெருமாள்(அழகிய மணவாளன்) விக்ரகத்தையும் கவர்ந்து சென்றார். 

தன் மகள் சுரதாணியிடம் இவற்றைக் காட்டிப் பூரித்த பாதுஷா, 'இவற்றில் எது வேண்டுமோ எடுத்துக்கொள்' என்கிறார். சுரதாணியைக் கவர்ந்ததோ, அழகிய மணவாளன் விக்ரகம்தான். 'இதற்கு ஒப்பாக வேறெதுவும் இல்லை' என்று கூறி அகமகிழ்ந்த சுரதாணி, விக்ரகத்தை அந்தப்புரத்தில் வைத்து ஆடிப்பாடி, விளையாடி மகிழ்ந்துவந்தாள். 

அழகிய மணவாளன் சிலை களவு போனதால் ரங்கம் கோயில் பூட்டப்பட்டது. திருவிழாக்கள் நடைபெறவில்லை. அங்கு வந்த கரம்பனூர் அம்மையார் என்ற பெண்மணி டெல்லி பாதுஷா கொள்ளையடித்து சென்றதை பின் தொடர்ந்து தானும் மாறு வேடமணிந்து டெல்லி வரை தொடர்ந்து சென்றதாகவும், அங்கு சுரதாணியிடம் பாதுகாப்பாக அழகிய மணவாளன் சிலை உள்ளது என்றும் கூறினாள். 

இத்தகவலைக் கொண்டு டெல்லி பாதுஷா ஆடல், பாடல்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் என்பதனை அறிந்தனர். ஸ்ரீரங்கத்திலிருந்து ஆடுவார், பாடுவாருடன் டெல்லி பாதுஷாவிடம் செல்கின்றனர். பாடுவார் இசைதனில் பெரிதும் மயங்கிய பாதுஷா தங்கம், வைர நகைகளையும், பட்டாடைகளையும், பீதாம்பரங்களையும் பரிசாக கொடுத்தார். அவற்றை வாங்க மறுத்ததால் திகைத்த பாதுஷா, 'பரிசுகள் போதாதா அல்லது வேறேதும் வேண்டுமா?' என கேட்கிறார். அதற்கு அவர்கள் வேறேதும் வேண்டாம். மகள் விளையாடும் அழகிய மணவாளன் விக்ரகம் மட்டுமே வேண்டும் என்றனர்.
பாதுஷா மிகவும் யோசித்து அழகிய மணவாளன் குறித்து பாடுங்கள், அவர் வந்தால் எடுத்துச் செல்லலாம் என்று கூறினார். 
கானத்தைத் துவங்கிய சிறிது நேரத்தில் ஆடுவார் மற்றும் பாடுவாரின் கண்களுக்கு அழகிய மணவாளன் காட்சி தருகிறார். சுரதாணிடத்தும் அபயக்கரம் நீட்டி காட்சி தருகிறார். மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்த சுரதாணியும் அங்கேயே மயக்க நிலை அடைகிறாள். அத்தருணத்தில் பாடுவார்கள் கையில் அழகிய மணவாளன் ஐக்கியமாகிறார். சற்று நேரம் கழித்து கண்விழித்த சுரதாணிக்கு, நடந்தவை யாவையும் கனவில் நடந்தது போல் தெரிய, அழகிய மணவாளனைத் தேடி அங்கும், இங்கும் ஓடுகிறாள்.

கண்ணீரும், கம்பலையுமாக முகமெல்லாம் வாடி உடல் சோர்ந்து நிற்கும் மகள் நிலை கண்டு திகைத்த பாதுஷா, உடனடியாகப் படை வீரர்களை அனுப்பி அழகிய மணவாளனின் விக்ரகத்தை மீட்டு வருமாறு உத்தரவிட்டார். இதற்கிடையில் பெருமாளின் விக்ரகத்தை எடுத்துக் கொண்ட எல்ேலாரும் ஒன்றாகச் சென்றால் அகப்பட்டு விடுவோம். மூவர் மட்டும் பெருமாளை எழுந்தருளச் செய்து திருமலையில் அடர் காட்டுப்பகுதியில் ஒரு மலைச்சரிவில் இலை, தழைகளில் மறைத்து வைத்தனர்.

பாதுஷா சேனைகளுடனும், தக்க ஏற்பாடுகளுடனும் மகளை ஸ்ரீரங்கம் அனுப்பி வைக்கிறான். அழகிய மணவாளனை தேடிக் கொண்டு வந்த பாதுஷாவின் படைகளுடன் சுரதாணி ஸ்ரீரங்கம் வந்து அழகிய மணவாளனைக் காணாது, கோயில் வாசல் பூட்டியிருப்பது கண்டு மண்ணில் மயங்கி விழுந்தாள். பெருமாளை நினைத்து உயிரும் துறந்தாள். அப்போது, பெருமாளின் பேருரு தோன்றியது. சுரதாணியின் உடலினின்றும் ஒரு ஒளி கிளம்பி அழகிய மணவாளனின் திருமேனியில் ஐக்கியமாகிறது.
திருமலையிலேயே பல ஆண்டுகள் இருந்த அழகிய மணவாளப் பெருமாள் மீண்டும் ஸ்ரீரங்கம் கொண்டு வரப்பட்டு பிரதிஷ்டை செய்யப்படுகிறார். 

அப்போது நாட்ைட ஆண்ட சோழன் இந்தக் கைங்கர்யத்தை நிறைவேற்றுகிறான். அன்று சோழ மன்னன் கனவில் பெருமாள் தோன்றி சுரதாணியின் வரலாற்றைச் சொல்லி, அவளுக்கு சன்னதி அமைக்குமாறு சொல்கிறார். அதன்படி, சோழன் பெருமாள் கருவறையின் வடகிழக்கு மூலையில் சுரதாணிக்கு ஒரு சன்னதி அமைத்து அதில் சித்திர வடிவில் சுரதாணியின் வடிவத்தைத் தீட்ட செய்கிறார். அன்று தொட்டு பெருமாளுக்கு முஸ்லீம்கள் வழக்கப்படி நித்தியப்படி காலையில் ரொட்டி, வெண்ெணய், இரவில் பால் முதலியன அமுது செய்யப்படுகின்றன. திருமஞ்சன காலத்தில் கைலி சாற்றும் வழக்கமும் நடைபெறுகிறது.

அகில், சந்தனம் கலந்து தூபப்புகை

வைகுந்த ஏகாதசி திருவிழாவில் பகல்பத்து திருவிழாவின் போது, சுரதாணி கோயில் கொண்டுள்ள சன்னதியின் படிகளுக்கு முன் அழகிய மணவாளன் எழுந்தருளும் போதும் சுரதாணிக்கு நன்கு காட்சி கொடுக்கும் நோக்கத்தோடு, திருப்பாதம் தாங்கிகள் தோளுக்கினியானை (பல்லக்கு) உயரத் தூக்கி பிடித்து அழகிய மணவாளனின் படியேற்ற சேவை சாதிப்பதும் இன்றும் வழக்கமாக இருந்து வருகிறது. அத்தோடு, துலுக்கநாச்சியார் சன்னதியில் முஸ்லீம்கள் பழக்க வழக்கங்களுக்கேற்ப அகிலும், சந்தனமும் கலந்த தூபப் புகை போடுவது இன்றும் நடந்து வருகிறது.

திருப்பதியில் ஸ்ரீரங்கநாதர் (உற்சவர்-அழகிய மணவாளர்) 40 ஆண்டு காலம் எழுந்தருளியிருந்ததை நினைவுறுத்தும் வகையில் 2004ம் ஆண்டு முதல் இக்கோயில் மிக முக்கிய நாட்களில் ஒன்றான கைசிக ஏகாதசி தினத்தன்று திருமலை திருப்பதியிலிருந்து ஸ்ரீரங்கநாதர், ஸ்ரீரங்கநாச்சியார், ராமானுஜர் ஆகியோருக்கு வஸ்திரம், குடை, மரியாதை செய்யப்படுகிறது. இதற்கு நன்றி செலுத்தும் விதமாக கோயிலில் இருந்து ஆனி வார ஆஸ்தான தினத்தன்று திருமலை திருப்பதிக்கு வஸ்திர மரியாதை செலுத்தப்படுகிறது.thanks Suseela suee

No comments:

Post a Comment

*You are in charge of taking care of yourself*, strive to make everyday Happy.One simplest ways to stay happy is letting go of the things that makes you sad.

*You are in charge of taking care of yourself*, strive to make everyday Happy.One simplest ways to stay happy is letting go of the things th...