Sunday, September 4, 2016

நீதிமன்றங்களில் நிலுயில் உள்ள வழக்குகளும், நீதிபதிகள் நியமனமும்

நீதித் துறையில் வழக்குகள் நிலுவை பல லட்சங்கள் உள்ளன. இதை தீர்க்க வேண்டுமென்றால் நீதிபதிகளை நியமிப்பதோடு புதிய நீதிமன்றங்கள், நீதித்துறைக்கு அடிப்படை வசதிகளையும் செய்து தரவேண்டும். உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தாக்கூர், உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதில் மத்திய அரசு தலையிடுவதை தாம் விரும்பவில்லை என்றும், உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகளே உயர்நீதிமன்ற நீதிபதிகளை பரிசீலித்து பட்டியல் தயாரிக்கவேண்டும் என்றும் பிரதானமாக நீதித்துறையே நீதிபதிகளை நியமிப்பதை கவனிக்கவேண்டும் என்றும் கூறியுள்ளார். ஆனால் மத்திய அரசு திட்டமிட்டு இதற்கு செவி சாய்க்காமல் நீதிபதி நியமன கோப்புகள் அனைத்தையும் கிடப்பில் போட்டுள்ளது. பல மாதங்களாக மத்திய அரசுக்கும், உச்சநீதிமன்றத்திற்கும் மௌனப் போராக நடந்துகொண்டிருக்கிறது. இதற்கிடையே உச்சநீதிமன்ற கொலிஜியம் உயர்நீதிமன்ற நீதிபதி பணியிடங்களுக்கு 74 பேர்களை பரிந்துரைத்து மத்திய அரசுக்கு அனுப்பியும் அதற்கான பதில் இதுவரை இல்லை. 2014 அக்டோபரில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீதித்துறை நியமன ஆணையச் சட்டம் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று தீர்ப்பளித்து அந்த சட்டத்தை ரத்து செய்துவிட்டது. மீண்டும் கொலிஜியம் முறையில் பரிந்துரைக்கப்பட்ட நீதிபதிகள் நீதிபதிகள் பதவிகளுக்கு நடைமுறை குறிப்பாணையை தயார் செய்யக் கூட மத்திய தயக்கம் காட்டுகிறது. இப்படியான நிலையில் நீதிபதிகளுடைய நியமனங்கள் உயர்நீதிமன்றத்தில் நிரப்பப்படமுடியாத நிலை. இதனால் நிலுவையில் உள்ள வழக்குகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருகிறது. அதுபோல கீழமை நீதிமன்றங்களிலும் உரிய நீதிபதிகள் பதவிகள் நிரப்பப்படாமல் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வரைபடத்தில் ஒவ்வொரு மாநிலத்திலும் உத்தேசமாக உள்ள வழக்குகளின் எண்ணிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

வேலுப்பிள்ளை பிரபாகரன்- Velupillai Prabhakaran

https://youtu.be/WrNmTFAoFw8?si=xJMjMucIKPf6JUWQ