Wednesday, August 23, 2017

வி.எஸ். நைப்பால் (V.S. Naipaul) - நோபல் பரிசு பெற்ற இங்கிலாந்து இலக்கியவாதி.

இங்கிலாந்தை சேர்ந்த புகழ்பெற்ற படைப்பாளியும் இலக்கியத்துக்கான நோபல் பரிசை வென்றவருமான வி.எஸ். நைப்பால் (V.S. Naipaul)  அவர்களின் பிறந்ததினம் ஆகஸ்ட் 17. அவரை குறித்த அழகிய முத்துப் பதிவுகள்.




- இங்கிலாந்தின டிரினிடாடில் சாகுவானஸ் என்ற இடத்தில் 1932ல் பிறந்தார். வித்யாதர் சூரஜ் பிரசாத் நைப்பால் என்பது இவரது முழுப்பெயர். இவரது பாட்டனார்கள் இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்தவர். இவரின் தந்தை ஒரு பத்திரிக்கையாளர். 


- சிறுவயதிலேயே தானும் ஒரு எழுத்தாளராக வேண்டும் என்று விரும்பினார். பள்ளிப் படிப்புக்கு பின்னர் குவின்ஸ் ராயல் கல்லூரியில் பயின்றார். அரசு உதவித்தொகையை கொண்டு, ஆக்ஸ்போர்டில் உயர் கல்வி பயின்றார். சிறிது காலம் பி.பி.ஜியில் கரீபியன் வாய்சஸ் நிகழ்ச்சியை எழதித் தயாரித்தார்.

 - நூல்கள் எழுதும் இவரது முயற்சி ஆரம்பத்தில் வெற்றி பெறவில்லை. 1952ல் ஸ்பெயன் சென்றார். அடுத்த ஆண்டு தந்தை இறந்ததால் வருமானத்துக்கு பல்வேறு பணிகளில் ஈடுபட்டார்.

- ‘போகார்ட்’ என்ற தலைப்பில் 1955ல் இவரது கதை முதலமுதலில் 1995ல் வெளிவந்தது. தொடர்ந்து எழுதினாலும் அவரால் பெரிதும் சம்பாதிக்க இயலவில்லை. 

- ‘மிஸ்டர் ஸ்டோன் அன்ட் தி நைட்ஸ் கம்பாணியன்’  என்ற முதல் நாவலை 1963ல் வெளியிட்டார். இந்த நாவலுக்கு ‘ஹாவ்தார்ன்டே’ விருது கிடைத்தது. 
- ‘ஏ பிளாக் ஆன் தி ஐலேண்ட்’1964ல் வெளியான நாவல் ஓரளவிற்கு வர்த்தக ரீதியில் வெற்றி பெற்றது. அடுத்தடுத்து வெளிவந்த இவரது நூல்கள் விமர்சன அரங்கில் பெரிதும் பாராட்டப்பட்டது. சிறுகதைகள், புதினம், உரைநடை நூல்கள் பலவற்றை இவர் எழுதியுள்ளார்.

ஈரான், இந்தோனேசியா, ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு அதன் பயண அனுபவங்களை தழுவி ஒரு நூல் வெளியானது. ‘மிஸ்டிக் மெசைர்’ என்று 1957ல் வெளிவந்த இந்த திரைப்படம் இவரின் நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது.

இந்தியாவில் ‘இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி’ இதழுக்காக ‘லெட்டர் ஃபிரம் லண்டன்’ என்ற மாதாந்திர கட்டுரையை எழுதினார். பல்வேறு நாடுகளின் அடிமை முறைகள், உள்ளூர் புரட்சிகள், அரசியல் நிலவரங்கள், ஊழல்கள், ஏழைகள், ஒடுக்கப்பட்டோரின் நிலை, கொரில்லா போர் என்று பல்வேறு நிகழ்வுகளை குறித்தும் எழுதியுள்ளார். 

மூன்றாம் உலக நாடுகளில் நிலவும் பண்பாட்டுச் சிக்கல்களைப் பற்றியும் தன் எழுத்தால் பதில் அளித்துளார். இவரது ‘ஏ பென்ட் இன் தி ரிவர்’ விமர்சன ரீதியிலும், வர்த்தக ரீதியிலும் பெரிய வரவேற்பை பெற்றது. ‘இன் ஏ ஃப்ரீ ஸ்டேட்’ என்ற நாவல் இவரது தலையாய படைப்புகளில் ஒன்று.

‘ஏ ஹவுஸ் ஃபார் மிஸ்டர் பிஸ்வாஸ் ’,‘ஹாஃர்ப் ஏ லைஃப்’,‘ஏ ரிடர்ன் ஆஃப் ஈவா பெரோன் அன்ட் தி கில்லிங்ஸ் டிரினிடாட்’,‘ஏ பென்ட் இன் தி ரிவர்’,‘ஏ வே இன் தி வேர்ல்ட்’,‘ஆன் ஏரியா ஆஃப் டார்க்னஸ்’,‘அமாங் தி பீலீவர்ஸ்: ஆன் எக்கனாமிக் ஜர்னி’,‘தி லாஸ் ஆஃப் எல்டொரேடோ’ உள்ளிட்ட அவரது படைப்புகளில் குறிப்பிடத்தக்கவை.

புக்கர் பரிசு, டேவிட் , கோகன் பிரிட்டிஷ் இலக்கியப் பரிசு மற்றும் ஸ்மிம்த இலக்கிய பரிசையும், நைட் பட்டம், கேம்பிரிட்ஜ், கொலம்பியா பல்கலைக்கழக சிறப்பு முனைவர் பட்டங்களையும் பெற்றவர். 2001ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றவர். உலகின் தலைசிறந்த படைப்பாளிகளுள் ஒருவராகப் போற்றப்படும் வி.எஸ். நைப்பால் இன்று 86வது வயதில் அடியெடுத்து வைக்கின்றார்.

#நைப்பால்
#naipaul
#nobel_laurete
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே எஸ்.இராதாகிருஷ்ணன்.
22-08-2017

No comments:

Post a Comment

*Worrying is like sitting in a rocking chair*

*Worrying is like sitting in a rocking chair*. It gives you something to do but it doesn't get you anywhere.Worry is a total waste of ti...