Saturday, December 31, 2022

பண வீக்கம், பணப்புழக்கம்.

நாம் அடிக்கடி கேள்விப்படும் பொருளாதாரம் சார்ந்த சொற்கள் பண வீக்கம், பணப்புழக்கம்.
 இதில் பணவீக்கம் என்றால் பணம் கைமாறாமல் ஒரு சில இடங்களில் முடங்கி கிடப்பது என்று நினைப்பவர்கள் அதிகம். உண்மையில் நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியுடன் தொடர்புடையது பண வீக்கம். பணத்தை வைத்தை நாம் பொருள்களை வாங்குகிறோம். உற்பத்தி குறையும்போது ஏற்கெனவே உள்ள பணத்தின் மதிப்பு அதற்கு ஏற்ப குறைந்துவிடுகிறது. விலையேற்றம் ஏற்படுகிறது. உற்பத்தியின் அளவை விட பணத்தின் அளவு அதிகமாக இருப்பதால்,  அதை பணவீக்கம் என்கிறோம். 
பணப்புழக்கம் என்பது பணப் பரிமாற்றத்தைக் குறிக்கிறது. பணம் ஒரு சில இடங்களில் மட்டும் தேங்கிக் கிடக்காமல், பலருடைய கைகளுக்கு மாறிச் செல்வது. இந்தப் பணப்புழக்கம் அதிகரித்தால்,  நாட்டின் பொருளாதாரநிலை மேம்பட்டிருக்கிறது என்று பொருள். பணம் சிலருடைய கைகளில் முடங்கிக் கிடந்தால் பொருளாதாரம் முடங்கியிருக்கிறது என்று புரிந்து கொள்ளலாம். அதிக பட்சம் மதிப்பு பணம் தாளில் அச்சிடபட்டு paper currency என்கிறோம். எனவே இது running notes ஆக பழகத்திற்க்கு எளிது. சிறிய மதிப்புள்ளவை காசுகளாக உள்ளன.
கடந்த அக்டோபர் மாத நிலவரப்படி இந்தியாவில் மக்களிடம் புழக்கத்தில் இருந்த பணத்தின் மதிப்பு ரூ.30.88 லட்சம் கோடி. 29.12.2022 - இல் ரிசர்வ் வங்கி வெளியிட்ட செய்திக் குறிப்பின்படி மக்களிடம் புழங்கும் பணத்தின் மதிப்பு ரூ.31.27 லட்சம் கோடி. பணப்புழக்கம் பெரிய அளவுக்கு அதிகரிக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது. 
 நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும், உள்ளடக்கிய வளர்ச்சிக்கும் பெரும் வேறுபாடு உள்ளது.  அதாவது நாட்டின் பொருளாதார வளர்ச்சி,  பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள மக்களுக்குச் சென்றடையாமல்,  ஒரு சிலர் மட்டுமே வளர்ச்சி அடைந்தால், அந்த வளர்ச்சி சிறப்பானதல்ல. இந்த உள்ளடக்கிய வளர்ச்சி இல்லாமல் போகும்போது அல்லது குறைவாக இருக்கும்போது, நாட்டில் பணப்புழக்கம் குறைந்து கொண்டே போகும். தற்போது உள்ள பணப்புழக்கம் குறித்த தகவல்கள் அதையே நமக்குத் தெரிவிக்கின்றன.
  ஏற்கெனவே இங்கு பல ஆண்டுகாலமாக உள்ள தொழில்களைப் புறக்கணித்தல், பெரும் தொழில்நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளித்தல், அளவற்ற அந்நிய முதலீடுகளை வரவேற்றல்,  இயற்கை வளங்களைக் கொள்ளையடித்தல் ஆகியவற்றுக்குப் பதிலாக, எல்லாரையும் உள்ளடக்கிய மக்கள் பொருளாதாரம் என்ற கோணத்தில் அரசுகள் செயல்பட்டால், பணப்புழக்கம் அதிகரிப்பதோடு, சாமான்ய மக்களின் வாழ்க்கை செழிப்படையும். இதற்கு பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும்.

No comments:

Post a Comment

*All you have to decide is what to do do with the time that is given*

*All you have to decide is what to do do with the time that is given*. You can rise from anything. You can completely recreate yourself. Not...