Monday, December 26, 2022

#*நாடாளுமன்றமுறை செயல்பாடுகள். ஜீரோ ஹவர்*

#*நாடாளுமன்றமுறை செயல்பாடுகள். ஜீரோ ஹவர்* 
—————————————
நாடாளுமன்றமுறை செயல்பாடுகளில், நாடாளுமன்ற அவை நடவடிக்கைகளில் ஜீரோ ஹவர் எனப்படும் கேள்வி நேரம், அவையை ஒத்தி வைப்பது, அவையின் கவனத்தை ஈர்ப்பது என்பவை எல்லாம் முக்கியமான விடயங்களாகும்.
தாய்ப் நடாளுமன்றமான பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் பிரபுக்கள் அவையில்(ஹவுஸ் ஆப் லார்ட்ஸ்) 1721, பிப்ரவரி 9 ஆம் தேதி கேட்கப்பட்ட கேள்விதான் உலகத்திலேயே  நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட முதல்  கேள்வியாகும். 

லார்ட் ஹவ்பேர் என்ற அவையின் உறுப்பினர் ஒரு கைதியைப் பற்றி கேட்ட கேள்விதான் அது.

சட்டத்தின் ஆட்சி; அனைவரும் சமம் என்ற நெறிமுறைகளும் கோட்பாடுகளும் பிரிட்டனில் பல்வேறு போராட்டங்களினால் நடைமுறைக்கு வந்தது. ஜான் அரசர் மகாசாசனம் (மேக்னகார்ட்டா)என்ற அரசியல் சாசன உரிமையை வழங்கினார். இதுவே அனைத்து அரசியல் சாசனங்களுக்கும் அடிப்படைக் கூறாக அமைந்தது. 

எழுதப்பட்ட அரசியல் சாசனம் பிரிட்டனில் கிடையாது. நீண்ட காலமாகப் பின்பற்ற மரபுகளே நடைமுறையில் அரசியல் சாசனமாக அங்கு இருக்கிறது. அதேபோல இஸ்ரேலிலும் நியூசிலாந்திலும் எழுதப்பட்ட அரசியல் சாசனம் இல்லை. மரபுகளை வைத்துக் கொண்டு அவற்றை நெறிமுறைகளாக ஏற்றுக் கொண்டு ஆட்சிகள் நடக்கின்றன.

நாடாளுமன்ற முறையில் கேள்வி நேரம் என்பது ஒரு  முக்கியமான விடயம். நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் நாட்டின் பொதுவான பிரச்னைகள் மற்றும் தங்கள் தொகுதியைக் குறித்தான சிக்கல்கள் தொடர்பான  கேள்விகளைக் கேட்டு,  சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடம் இருந்து பதில் பெறுவதுதான் கேள்வி நேரம் என்று வகுக்கப்பட்டது. 

இந்திய நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின் முக்கியத்துவமும் அதன் கால அவகாசமும் குறைந்து கொண்டே வருகிறது. கேள்வி கேட்க விரும்பும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 15 நாட்களுக்கு முன்பே 150 வார்த்தைகளுக்கு மிகையாகாமல் கேள்வியின் படிவத்தை முறையாக மக்களவை, மாநிலங்களவை செயலகத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.  

எழுத்துவடிவிலான கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் நேரடியாக வந்து பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.  வாய் மொழிக் கேள்விகளுக்குசம்பந்தப்பட்ட துறை அமைச்சர் அவசியம் அவையில் இருக்க வேண்டும். வினா நேரத்தில் துணைக் கேள்விகளையும்  கேட்கலாம். நாடாளுமன்றத்தில் பல கேள்விகள் நிராகரிக்கப்படுவதும் உண்டு. பல கேள்விகள்  குலுக்கல்  முறையிலும் வகைப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது. 

மக்களவை 543 உறுப்பினர்களுக்கு  லாட்டரிச் சீட்டில் பரிசு கிடைத்ததைப் போலத்தான்  லாட்டில் இந்த கேள்விகள் கேட்கும் வாய்ப்புகள் அமையும்.

#கே. எஸ்.இராதாகிருஷ்ணன்
#K.S.Radhakrishnan
#ksrpost
26-12-2022.

No comments:

Post a Comment

விவசாயம்⁉️

இரண்டு கோடிகள் கொடுத்து ஒரு ஜோடி நாய்கள் வாங்கும் எங்கள் தேசத்தில்...!! இருபது கோடிகள் கொடுத்து ஒருவர் மட்டுமே பயணிக்க கார் வாங்கும் எங்கள் ...