Saturday, October 14, 2023

#*திருமதி கனிமொழியின் மகளிர் உரிமை மாநாடு* #*மதுவிலக்கு மகளிரின் உரிமை…..?* #*காங்கிரஸ்-காவேரி*



————————————
தூத்துக்குடி  நாடாளுமன்ற உறுப்பினரும்  திமுக மாநில மகளிர் அணி செயலாளருமான திருமதி கனிமொழி கருணாநிதி அவர்கள் இந்திய அளவில்  மகளிர்  உரிமை மாநாடு ஒன்றை இன்று கூட்டவிருக்கிறார். மிகச் சிறந்த ஏற்பாடு. அவருக்கு  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

இத்தகைய மாநாட்டை அவர் ஒருங்கிணைக்கும் போது ஒரு பரந்துபட்ட அளவில் இந்திய கவனத்தை ஈர்க்கும் அளவிற்கு அது எப்போதேனும் நடந்திருக்கிறதா இல்லை இனியேனும் நடக்கப் போகிறதா என்பது ஒரு கேள்விக்குறி? ஏன்எனில் இத்தகைய மாநாட்டிற்கு மிக நெருங்கிய இந்தியக் கூட்டணியில் இருக்கும் லல்லு பிரசாத் அவருடைய மகள் மிசா பாரதி வரவில்லை.இந்த இருவரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்.

தோழமைக் கட்சிகளுடன் நெருக்கமாக இருப்பதாகச் சொல்லிக் கொள்ளும் கனிமொழியின் இத்தகைய சிறப்பு மாநாட்டிற்கு முறையான அழைப்புகள் இருக்கும் பட்சத்தில் இது ஒரு நாடு தழுவிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்கிற எண்ணத்தில் ஒருங்கிணைக்கப்பட்டு  இருக்குமேயானால்   மம்தா பானர்ஜி ஏன் வரவில்லை? ஆனால் அவரின் பிரதிநிதி மட்டும் அனுப்பியுள்ளார். மாயாவதி அழைக்கப்பட்டாரா?
பரூக் அப்துல்லா தேசிய மாநாட்டு கட்சி சார்பாகவோ, சார்பாகவோ யாரும் ஏன் கலந்து கொள்ளவில்லை?

இம்மாதிரி கேள்விகள் ஒருபுறம் இருக்க திருமதி கனிமொழி அவர்கள் இந்த மாநாட்டு தீர்மானத்தில் தான் முன்னர் காலங்களில் பேசியபடி 2019 ல் அளித்த தங்களது வாக்குறுதியின் படி மதுவிலக்கு கட்டாயம் என்று தீர்மானம் போடுவாரா?

பெண்களின் தீராத பிரச்சனை என்பது வீட்டு ஆண்களின் குடிப்பழக்கம் தான் அதனால் அவர்களது உள்ளமும் உடலும் துன்பமுற்று ஆழ்ந்த சிக்கலுக்கு உண்டாகி குடும்பம் குழந்தைகள் எல்லோரும் அவஸ்தைப் படுவதை தான் நன்கு உணர்ந்துள்ளதாக கூறிய கனிமொழி அவர்கள் இந்த மாநாட்டில் அத்தீர்மானத்தை வற்புறுத்தி நிறைவேற்ற செய்வாரா.? பெண்கள் நலனை பேசுவது முக்கியமானது ஆனால் இது அதைவிட முக்கியம் இல்லையா? 

மகளிர் உரிமைத் தொகை சொன்னபடி அனைவருக்கும் ஏன் வழங்கவில்லை?

#காவேரி க்காக இப்படி ஒரு கூட்டம் ஏன் கூட்ட வில்லை ? 

இதே மாதிரி ஒரு கூட்டத்தை கூட்டி,  இந்த நிகழ்வில்லே அதே காங்கிரசை காவேரி தண்ணீர் தர வலுயுறுத்ததிமுகவிற்கு ஏன் மனம்  இல்லை .

சோனியா காந்தி அம்மையாரை கூப்பிடுகிறீர்களே....

அவரிடம் இதே கூட்டத்தில், அவருடைய கட்சி ஆட்சியில் இருக்கும் கர்நாடகத்திலிருந்து தண்ணீர் தருவோம் என்ற உத்தரவாதத்தை சோனியாவிடமிருந்து உங்களால் பெற முடியுமா ?

கலைஞர் அவர்கள் இருந்த போது 2012, ஆகஸ்ட்டில் டெசோ மாநாடு நான் முன்இருந்து பணி ஆற்றி நடத்தியது ஒரு நாள் கதை ஆனது. அவ்வளதான். பின் டெசொ, ஈழம்?

இதில் வேடிக்கை என்ன என்றால்…
மகளிர் உரிமை மாநாடு அல்ல, மகளிர் வாரிசு அரசியல்  உரிமை  கேட்கும் மாநாடு 

காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருமதி சோனியா காந்தி, அவரது மகள் திருமதி பிரியங்கா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் மகள் திருமதி சுப்ரியா சுலே, காஷ்மீர் முன்னாள் முதல்வர் திருமதி மெகபூபா முப்தி, இந்திய கம்யூனிஸ்ட் தேசியப் பொதுச்செயலாளர் திரு. டி.ராஜாவின் மனைவி திருமதி ஆனி ராஜா உள்ளிட்டோர் பங்கேற்க இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் அரசியல் வாரிசுகள். மகளிர் உரிமை மாநாடு என்ற பெயரில் மகளிர் வாரிசு உரிமை மாநாட்டை நடத்துகின்றனர். 

மறதி என்ற வியாதி இருக்கும் வரை இந்த பாசாங்கு தொடரும்

அப்படி இல்லாமல் இந்த மாநாடு நடப்பதன் பலன் தான் என்ன? ஒரு வேளை தன் தனி ஆளுமைக்கு  ஒரு வெறும் அடையாளத்திற்காக மக்கள் முன்பு இந்த கூட்டத்தை கூட்டுகிறார் என்றால் தனது இருப்பிற்கான கால் ஆட்டுதல் தானே அது?
எருது நோய் காக்கைக்கு எப்படி தெரியும்?

#மதுவிலக்கு_மகளிரின்_உரிமை
#காவேரி
#கனிமொழியின்_மகளிர்_உரிமை_மாநாடு
#மகளிர்வாரிசுஅரசியல்உரிமைகேட்கும்மாநாடு 
#மகளிர்உரிமைத்தொகை


#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
14-10-2023.

No comments:

Post a Comment

*Run your own race. No one cares what you are doing*

*Run your own race. No one cares what you are doing*. Think yourself as a powerful creator. You will see opportunities to get your goal, and...