Thursday, October 19, 2023

#*இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்சனை!*.



#*இஸ்ரேல் பாலஸ்தீன
பிரச்சனை!*. 

—————————————
இஸ்ரேல் பாலஸ்தீன என அங்கு நடக்கும் கொலைபாதகத் திட்டங்களால்  உலகம் தன் பதற்றத்தைப் பலவாறாக சந்தித்துக் கொண்டிருக்கிறது. மிக வன்மையான முறையில் ஜெனீவா,
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையம் (Office of the United Nations High Commissioner for Human Rights, OHCHR) அவையில் கண்டித்தும் கூட இந்த பிரச்சனையில் இஸ்ரேல் அலட்சியம் காட்டுவதும் அதை மதிக்காமல் நடந்து கொள்வதும் கூட உலகத்தின் துக்கத்தில் ஒரு அதிர்ச்சி தான். இதைச் சாக்காக வைத்து கம்யூனிச சோஷலிசம் பேசும் ரஷ்ய அரசு இன்று ஐநா மனித உரிமைகள் ஆணையம் சபையை விட்டு வெளியேறி உள்ளது. இதில் முரண் நகை என்னவென்றால் 1947 இல் இஸ்ரேலை அங்கீகரித்து அதற்கு முழு உதவியும் செய்தது இதே பொதுவுடமை பேசிய ரஷ்ய கூட்டுறவு ஆட்சிதான். லெனின் சொன்ன தேசிய இன்ங்கள் உரிமை, உலக வாதம் என்பதை இன்று ஈழம், பாலஸ்தீன பிரச்சனைகளில் மறந்து விட்டது.

பாலஸ்தீனியர் என்ற பெயர் முஸ்லிம்களை மட்டும் குறிப்பது என்பது இருபதாம் நூற்றாண்டிலிருந்துதான் துவங்குகிறது. அதற்கு முன்னால், பாலஸ்தீனியர்கள் என்றால் அது அங்கு இருப்பவர்களை, யூதர்களைக் குறிப்பதாகத்தான் இருந்தது. பாலஸ்தீன் என்ற பெயரும் இஸ்ரேல் என்ற பெயரும் ஒரே இடத்தைத்தான் என்று@ Modern Traveller (1830 Ed)சொல்கிறது.  இந்தியா என்பது பாகிஸ்தானையும் பங்களாதேஷையும்  நாட்டின் விடுதலைக்கு முன்  உள் கொண்டது மாதிரி .
1947க்கு பின் நிலமைகள்  மாறின…
பாலஸ்தீனிய முஸ்லிம்கள் அனைவரும் அங்கேயே இருந்தவர்கள்.  பிரிட்டிஷ் ஆட்சியில் எகிப்து போன்ற அரபு நாடுகளிலிருந்துஅங்கு முஸ்லிம்கள் குடியேறினார்கள். கடந்த 1914ல் பாலஸ்தீனியத்தில் 5 லட்சம் முஸ்லிம்கள் இருந்தார்கள். இன்று 55 லட்சம் முஸ்லிம்கள் இருக்கிறார்கள். இஸ்ரேலில் சுமார் 17 லட்சம். மக்கள் தொகையில் 18 சதவீதம். பாலஸ்தீனத்தில் 99 சதவீதம் முஸ்லிம்கள். ஒரு சதவீதம் கிறித்துவர்கள். 
முன்பு இஸ்ரேலிலிருந்து முஸ்லிம்கள்  பல முஸ்லிம் நாடுகளிலிருந்தும் யூதர்கள் வெளியேறினார்கள். பல லட்சம் யூதர்கள அரபு நாடுகளிலிருந்து இரண்டாம் உலகப் போருக்குப் பின் வெளியேறினார்கள்.
சிறுபான்மையினர் பாலஸ்தீனத்தில் 15 சதவீதம் இருந்தவர்கள் இன்று இரண்டு சதவீதம். பெத்லஹேம் நாசரேத் போன்ற முக்கியமான இடங்களிலும் இன்று முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக இருக்கிறார்கள். எகிப்தில் 10 சதவீதம் கோப்டிக் கிருத்துவர்கள். இப்படியாக அங்குள்ள புவி அரசியல் 

ஆயிரம் அரசியல் காரணங்கள் இருக்கலாம் !அன்றைக்கு ஒரு நீதி இன்றைக்கு வந்து இஸ்ரேலுக்கு எதிராக ஒரு நீதி என்றால் கம்யூனிசம் பேசும் சோசலிசவாதிகள் எந்த நிலைப்பாட்டில் இருக்கிறார்கள்.? இங்கே பொதுவுடைமையை எங்கே வைத்து அலசி ஆராய்வது? எல்லாம் வெட்க கடாய் முடிந்து கொண்டிருக்கிறது! வரலாறு ஒரு முறை சரியாக நிகழும் மறுமுறை கேலிக்கூத்தாக முடியும் என்பதற்கு உதாரணம் தான் இன்றைய ரசிய அரசின் நடவடிக்கைகள்.

இன்று காசா மருத்துவமனை மீது கொடூரமான தாக்குதல் நிகழ்ந்திருக்கிறது! ஏறக்குறைய ஆயிரம் பேருக்கு மேல் பிள்ளை குட்டிகளோடு பெண்களும் ஆண்களுமாய் இறந்து போயிருக்கும் கொடுமையை என்ன சொல்லி ஆற்றுவது? நினைத்தால் எந்த உள்ளம் தான் வீட்டில் நிம்மதியாக இருக்க முடியும் மரணம் எங்கு நிகழ்ந்தாலும் மனித உள்ளம் பதற்றமும் கவலையும் அடையத்தான் செய்யும். 

இந்தக் கொடுமையான யுத்தத்தினால் எத்தனை பாதிப்புகள் உலக மக்களின் கண்ணுக்கு தெரியாமல் நடக்கும் என்பதை பொருளாதார நிபுணர்களும் அல்லது போரியல்  நிபுணர்களும் ஆராய்ச்சியாளர்களும் ஆய்ந்து சொல்லத்தான் வேண்டும்! ஒரு எட்டுவயது பையன் காசாவில் சொல்கிறான் "நான் உயிரோடு இருந்ததால்தானே வாழ ஆசைப்படுவதற்கு நான்  விரைவில் கொல்லப்படுவேன்". பாலஸ்தீனம் மற்ற நாடுகளின் உதவியில் நிர்வாகம் நடக்கிறது.

கடந்த 1947ல் பாலஸ்தீனிய அகதிகள் சுமார் 7 லட்சம், யூத அகதிகள் சுமார் 8 லட்சம் இருந்தார்கள். யூதர்கள் உலகின் பல இடங்களுக்குச் சென்று குடிமக்கள் ஆகி விட்டார்கள். இந்தியாவிலும்  உள்ளனர்.
ஹைதராபாத்தில்  என் யூத நண்பர்கள் உண்டு.பெரும்பாலான யூதர்களை  உலகில் ஏற்றுக் கொண்டது. பாலஸ்தீனிய அகதிகளை அரபு நாடுகள் ஏன் ஏற்றுக் கொள்ளவில்லை?  முக்கியமாக ஜோர்டான் அது 1920கள் வரைகிழக்குப்பாலஸ்தீனமாக இருந்தது, 

இதுதான் அங்கு இன்று உயிரை கையில் பிடித்துக் கொண்டு வாழும்  மக்களின் இன்றைய நிலமை.

உலகம் பாழ் பட்டு நிற்கும்போது அறிவுஜீவிகளும் அறிஞர்களும் அரசுகளும் ஒன்றிணைந்து இந்த பிரச்சனைக்கு தீர்வு காணக்கூடிய நல்ல அமைப்புகள் இல்லாமல் போய்விட்டனவா அல்லது எல்லா நாடும் பேரரசை நாடாக மாறிவிட்டதா?

இன்று தமிழக முதல்வர் இஸ்ரேல் தாக்குதல்களுக்கு கண்டனம்- விசனம் தெரிவிக்கிறார். ஆடு நனைகிறது என ஓநாய் கண்ணீர் விடுவது போல் இருக்கிறது.

இந்தக் கண்ணீர் அன்று காங்கிரஸ் -திமுக கூட்டணி அரசு உதவி மேற்பார்வையில் சிங்கள அரசோடு இணைந்து 2009இல் ஈழ மக்களின் மீது கொத்துக்கொத்தாய் கிளஸ்டர் குண்டுகளை போட்டு குலைபாதகமாய்க கொன்று குவித்த அன்று அல்லவா சிந்தி இருக்க வேண்டும். எத்தனை தொப்புள்கொடி உறவுகள் செத்து விழுந்து மாய்ந்தன. அவர்களெல்லாம் அப்பாவிகள் இல்லையா எளிய இலங்கை  ஈழதேசிய இனக் குடிமக்கள் இல்லையா. இன்றைய பாலஸ்தீன விட அதிகமாக 2 இலட்சம் ஈழத்தமிழர்கள பலவகையில் பாதித்தனர்.

இது பற்றி எந்த உலக நாடுகளாவது   அன்று வாய் திறந்ததா? 
ஐநா சபையில்  மனித உரிமை ஆணையத்தின் மூலம் கடந்த 15 வருடங்களாக ஈழத்தமிழர் பிரச்சனை அங்கு விவாதத்திற்கும் அவர்களுக்கான நீதியை கேட்டும் பல குற்றசாட்டுக்கள்- தீர்மானங்கள் தாக்கல் செய்த போதும் கூட ஒரு சோசலிச கம்யூனிச நாடுகள் என்று பீற்றித் திரிகிற குறிப்பாக ரஷ்யா கியூபா சீனா போன்ற எந்த நாடுகளும் ஆதரிக்கவில்லை என்பதுதான் மிகப்பெரிய கொடுமை. இறுதியில் எல்லோரும் கைவிட்டுப் போன கதைகளெல்லாம் நடக்கவில்லையா ? இன்று அவர்களெல்லாம் இஸ்ரேலுக்கு ஆதரவாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். உலகில் ஈழத் தமிழர்களைப் பூண்டோடு அழித்த இனபாதகச் செயல்களுக்கு யார் பொறுப்பேற்பது?

இஸ்ரேல் காசா மக்களுக்கு ஒரு கண் ஈழத்தமிழர்களுக்கு ஒரு கண்ணா இந்த இரட்டை வேடம் எதற்கு? எல்லாவற்றுக்கும் வரலாறு பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்.

இரட்டை வேடங்களைப் போட்டு நடிப்பவர்கள் பேசுபவர்கள் வாய்ஜாலத்தில் மட்டும் தான் வீரர்கள். முதல்வர் ஸ்டாலினுக்கு எதுவும் தெரியவில்லை. எழுதிக் கொடுப்பவர்களாவது உருப்படியாக எழுதி கொடுத்து இந்த இஸ்ரேல் பிரச்சனையில் உண்மை நிலவரம் என்ன என்று அவருக்குச் சொல்லி இருக்கலாம்.

விடியல் விடியல் என்றால் விடிந்து விடுமா?

நான் பங்கு ஆற்றிய  டெசோ மாநாட்டை கூட்டும்போது அங்கு தங்கள் ஆட்சிக்கு பாதகம் இல்லாத ஒரு பேச்சு இன்றைக்கு மக்களின் முன்பு பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக ஒரு பேச்சு! சில நாட்களில் டெசோ கடையும் மூடப்பட்டது.

 இந்த இரட்டை வேடம் யாரை ஏமாற்ற

இனி மக்கள்தான் யோசிக்க வேண்டும்!

#ISRAEL_PALESTINIANS
#IsraelHamas_War  #IsrealPalestineconflict #Eelam #eelamtamils
#இஸ்ரேல்_பாலஸ்தீன_பிரச்சனை
#காசா #ஈழம்

K.S. Radhakrishnan 
கே.எஸ்.இராதா கிருஷ்ணன்.
#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
19-10-2023.

No comments:

Post a Comment

*Run your own race. No one cares what you are doing*

*Run your own race. No one cares what you are doing*. Think yourself as a powerful creator. You will see opportunities to get your goal, and...