Sunday, October 22, 2023

#*மதச்சார்பின்மை* (*secularism*) *சொல்வது பிழை*. #*மதநல்லிணக்கம்*(*communal harmony*) *என அழைக்க வேண்டும்*. ‘#*திமுக இந்துமத எதிரி இல்லை* ‘-#*முதல்வர் ஸ்டாலின்*

#*மதச்சார்பின்மை*
(*secularism*) *சொல்வது பிழை*. 
#*மதநல்லிணக்கம்*(*communal harmony*) *என அழைக்க வேண்டும்*. 
‘#*திமுக இந்துமத எதிரி இல்லை* ‘-#*முதல்வர் ஸ்டாலின்*
————————————
தமிழக முதல்வர் ஸ்டாலின் ‘திமுக இந்த மத எதிரி இல்லை ‘என்று கூறுகிறார். அப்படியானால் இந்து மக்களின் பூர்வ நம்பிக்கையான அல்லது வாழ்வியல் முறையான சனாதனத்தை எதிர்த்து பேசுவதில் இவ்வளவு வன்மம் காட்டுவது ஏன்? இந்து பெரும்பான்மையான மக்களுக்கு அவர்களுடைய வாழ்க்கை முறையோடு இணைந்த சனாதனத்தை ஒழித்துக் கட்டுவோம் என்று சொல்வதெல்லாம் அவர்களுக்கு எதிரானது இல்லையா? மூடநம்பிக்கையை ஒழிப்பது வேறு சனாதனத்தை ஒழிப்பது வேறு அது ஒரு மக்களின் இருத்தல் வாதத் தொகுதியையே மறுப்பதாகும் என்ற அறிவு கூட வேண்டாமா?

எந்த  மத மார்க்கத்திற்குதான் சனாதனம்  மாதிரி குறியிடூகள இல்லை .அது ஒரு வாழ்கைமுறை. மாற்ற இயலாது என்று சொல்கிறார்கள். அதை நீங்கள் மாற்ற முயற்சிப்பது என்பது வேறு' வாய்க்கு வந்தபடி பேசுவது என்பது வேறு .ஒரு பொறுப்பில் இருக்கக் கூடியவர்கள் ஒரே கண்ணோட்த்தை மட்டும் வைத்துக்கொண்டு பேசக்கூடாது .

விஸ்வகோஷ் அகராதியில் இந்து என்றால் திருடன் என்று போட்டிருக்கிறது என்று திமுக சொல்லவில்லையா? இலங்கை பாலத்தை ராமர் கட்டினார் என்றால் ராமர் எந்த கல்லூரியில் பொறியியல் படித்தார் என்று கிண்டல் செய்யவில்லையா? இதெல்லாம் புராண இதிகாச கதைகளில் இருக்கக்கூடிய ஒரு வகையான நம்பிக்கை . அந்த நம்பிக்கையை வாழ்வியல் முறைகளோடு இணைத்து பார்ப்பதும் அத்தகைய புராண தன்மைகள் இருக்கக்கூடிய ஒரு இந்துசமுகம் தன்னுடைய கதையாடல்களை அது தனக்கான உத்தரவாதமாக அடையாளமாக வித்தியாசமாக  வைத்திருக்கிறது என்பதைக்கடப் புரிந்து கொள்ளாமல் அதன் மேல் குற்றம் சொன்னால் அது பகுத்தறிவாக மட்டும் இருக்காது. அது ஒரு பக்க சார்பான குறிப்பாக சிறுபான்மைகளிடம் ஓட்டு வாங்குவதற்காகத்தான் இருக்க முடியும்!  போக இந்து ஜன சமுத்திரம் சார்ந்து வாழ்ந்து வரும் மக்களை சனாதனத்தை ஏற்று பன்னெடுங்காலம் வாழ்ந்து வரும் சமூகத்திரட்சியை அவமானப்படுத்துவது தொந்தரவு செய்வது எந்த வகையில் நியாயம்?

அறிவியல் பூர்வமாக இயக்கபூர்வமாக கொள்கை என்று சொல்வதெல்லாம் ஒரு வகையான கணிதம் தான். கொள்கை என்பது எல்லா விதமான  மார்க்கத்திலும் தளத்திலும் உண்டு.அந்த மார்க்கத்தின் படி ஒழுகுவது இந்து மார்க்கத்திற்கும் பொதுவானதுதான்! அதை பகுத்தறிவு மார்க்கத்திற்கு மட்டும் பொருந்தும் என்று சொல்லக்கூடாது! எல்லாவற்றிலும் ஒரு அனுகுமுறை கணக்கு இருக்கிறது அது இயக்கமாகவும் இருக்கிறது என்பதை புரிந்து கொண்டு அதை ஒழிப்போம் இதை ஒழிப்போம் என்கிற கூச்சல்களை கொஞ்சம் திமுக நிறுத்திக் கொள்ளத்தான் வேண்டும்.
நிறுதங்கள் பசப்பு வார்த்தைகளை….

மதச் சார்பின்மை
(secularism) சொல்வது பிழை. 
மத நல்லிணக்கம்(communal harmony) என அழைக்க வேண்டும்.
மதச்சார்பற்ற நாடு என்பது தவறான வாதம்! மதங்களை வைத்து அரசியல் செய்யும், சில அரசியல் கும்பலுக்கு எங்கே தெரியப்போகிறது எல்லா மதங்களும் நிலையூன்றி சகஜமாக சமமாக வாழ்ந்து கொண்டிருக்க கூடிய ஒரு சமூகத்தில் குறிப்பிட்ட வெகுமக்களுக்கு மட்டும் எதிராக எப்படிப் பேசுவது? அது என்ன வகையான மத நல்லிணக்கம்?

வாஸ்தவத்தில் என்ன பேசி இருக்க வேண்டும் என்றால்

•திருக்கோயில்களில் ஆறு கால பூஜைகள் நடக்கட்டும்

•இஸ்லாமியர்களுடைய மசூதிகளில் பாங்கு ஓசையோடு ஐந்து முறை தொழுகைகள் நடை பெறட்டும்.
 
• கிறிஸ்தவர்களின் தேவ ஆலயங்களில் மணி ஓசையோடு ஜெபங்கள்  சிறக்கட்டும்.

•சீக்கியர்கள் குருத்துவாரில் தர்பார் சாகிப் மேடையில் குரு கிரந்த் சாகிப் பக்திப் பாடல்களை பாடி வழிபாடு செய்யட்டும்.

• புத்த விகாரில் புத்தம் செழிக்கட்டும்

•இறை மறுப்பு என்று சொல்பவர்கள் தங்களுடைய கருத்துக்களை சதுக்கங்களில் பேசட்டும். 

ஆக பல்வேறு வகையில் ஒரு அரசு அத்தகைய தனித்தன்மைகளை ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான் அறம்.அதை விட்டுவிட்டு வெறும் மதச்சார்பற்ற அரசு என்று சொல்வது எப்படி பொருந்தும் இஸ்லாம் கிறிஸ்துவம் இந்து சீக்கியர் என்று சொல்லக்கூடிய பல்வேறு மதங்கள் தங்களுடைய வாழ்க்கை முறையில் அதை ஏற்றுக்கொண்டு  லட்சியபூர்வமாக வாழ்ந்து வருகிற சூழலில் இதற்கெல்லாம் இடம் கொடுப்பது தானே ஒரு தேச மதச்சார்பின்மை ஒருமைப்பாடு ஒருங்கிணைப்பு ஒற்றுமை என்று நாம் பேச முடியும் !ஒரு பக்கம் ஒரு மத மக்களை தாழ்த்தி மறுபக்கம் மற்றவர்களை உயர்வாக
 வைத்துப்பேசுவது இதெல்லாம் எந்த வகையான தந்திரம்.? திமுகவின் கொள்கை என்பதெல்லாம் அவரவருக்கான சுயநலன் வாக்கு வங்கி இன்றி நிலவும் மத சாதியத்திற்கு அப்பாற்பட்ட தூய புனிதம் ஒன்றும் இல்லை! அவற்றிலும் சாதிகளும் உண்டு மதங்களும் உண்டு பல நம்பிக்கையாளர்கள் இருக்கிறார்கள்! எல்லாருடைய மனமும் புண்படாமல் பேச வேண்டும் என்பதுதான் ஒரு அரசு மேற்கொள்ள வேண்டிய செய்தி ! திமுக யாருக்கும் எதிரிஅல்ல என்று சொல்லிவிட்டு போவது மட்டும் புத்திசாலித்தனமானது அல்ல. உண்மையிலேயே அது எதிரியாக யாருக்கு இருக்கிறது? ஏன் அங்குள்ளவர்கள் இவ்வாறு  பேசுகிறார்கள்  ஏன் இந்து மக்களை விரோதம் செய்கிறார்கள்.
 என்பதற்கெல்லாம் முதலில் ஸ்டாலின் அவர்கள் பதில் சொல்லத்தான் வேண்டும்! இந்து மக்களுக்கு திமுக எதிரி அல்ல என்று சொல்லிக்கொண்டே அது மறுதலையில்  தன் எதிரியை கட்டமைத்துக் கொண்டிருக்கிறது.

அதுவும் தன் வியூகத்தால் அல்ல தன் ஆட்சி கையில உள்ளது என ஆணவத்தால் என்பதுதான் அதன்  இன்றைய நிலைப்பாடு!

#மதச்சார்பின்மை
#secularism
#மதநல்லிணக்கம் #communal_harmony. 
‘#திமுக_இந்துமத_எதிரி_இல்லை ‘-#முதல்வர்ஸ்டாலின்

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
22-10-2023.


No comments:

Post a Comment

*Run your own race. No one cares what you are doing*

*Run your own race. No one cares what you are doing*. Think yourself as a powerful creator. You will see opportunities to get your goal, and...