பன்னாட்டு
வணிகம், பணப் பரிவர்த்தனைகள் உலகளவில் இன்றைக்கு மோசமாக இருப்பது மட்டுமல்லாமல்
நிதி நெருக்கடியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. கிரீசில் நடந்ததுபோல
இந்தியாவிற்கும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுவிடுமோ என்ற ஐயம் நிலவுகிறது.
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், பிரிட்டன் போன்ற நாடுகள் இதை தீர்க்கும் பொருட்டு
சில முடிவுகளை எடுத்துள்ளன. சீனாவும், ரஷ்யாவும் தனி ஆவர்த்தனமாக நடந்து
கொண்டுள்ளது. ஆசிய நாடுகள் பாதிக்கப்படலாம். எழுந்த ஜப்பான் நிலைமையும் சொல்லிக்
கொள்ளும் அளவில் இல்லை. இப்படியான நிலைமை மோசமாகப் போனால் லத்தீன் அமெரிக்க நாடுகளைப்
போன்று பெரும் சீரழிவை காணவேண்டிய நிலைக்குத் தள்ளப்படலாம்.
#இந்திய_பொருளாதாரம்
#Indian_Economy
#KSRPostings
#KSRadhakrishnan_Postings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
08-10-2019
No comments:
Post a Comment