பதினோரு ஆண்டுகளாகி விட்டன.
2008 ஆம் ஆண்டு.ஜனவரி மாதம் பிரபல நவீன ஓவியரான ஆதிமூலம் மறைந்த ஒரு மாத காலத்திற்குள் அவரைப் பற்றி நண்பர் மணா தொகுத்து எழுதிய "ஆதிமூலம் அழியாக் கோடுகள்" நூல் சென்னை பிலிம் சேம்பரில் வெளியிடப் பட்டது.
விழாவில் புத்தகத்தை வெளியிட்ட உயிர் எழுத்து பதிப்பகத்தின் சுதீர் செந்தில். ஓவியர்கள்,எழுத்தாளர்கள்,திரைக் கலைஞர்கள் என்று நிறையப்பேர். அரங்கு நிறைந்திருந்தது.
அப்போது தான் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்த நிலையில் நூலை வெளியிட வந்திருந்தார் ஜெயகாந்தன். நூலைப் பெற்றுக் கொள்ள தசாவதாரம் படப்பிடிப்பிற்கு இடையில் வந்திருந்தார் கமல்ஹாசன். ஆதிமூலத்தைப் பற்றிய குறும்படம் திரையிட்ட பிறகு நடந்தது நூல் வெளியீடு.
கமல் , சிவகுமார்,நாசர், ஜெயகாந்தன்,பிரபஞ்சன்,மாலன், சா.கந்தசாமி,ஓவியர்கள் மருது, ஆதிமூலத்தின் குடும்பத்தினர் என்று நிறையப்பேர் கலந்து கொண்ட கூட்டத்தில் அவ்வை நடராசன், இறையன்பு,நக்கீரன் இணையாசிரியராக அப்போதிருந்த காமராஜ் என்று கலந்து கொண்ட அந்த நிகழ்வு இப்போதும் நல் ஓவியத்தைப் போல மனதில் பதிந்திருக்கிறது.
காந்தி நூற்றாண்டில் அவருக்காக நூறு படங்களை வரைந்து காட்சிப்படுத்திய நவீன ஓவியரான ஆதிமூலத்திற்குச் செலுத்தப்பட்ட சிறப்பான அஞ்சலிக் கூட்டத்தைப் போலிருந்தது அந்த விழா.
நிறைவாக ஒரு தகவல்: கரிசல் எழுத்தாளரான கிரா-வின் எழுத்துப் பதிவுகளுக்கு அழகான கோடுகளால் நவீன ஓவியங்களை வரைந்தவரும் ஆதிமூலம் தான்.
10-10_2019.
No comments:
Post a Comment