Sunday, March 19, 2023

#சுவாமி விபுலானந்தர்

#சுவாமி விபுலானந்தர் 
—————————————
சுவாமி விபுலானந்தர் சைவத்தையும் தமிழையும் நேசித்தவர். அவினாசிலிங்க செட்டியார்,பெரியசாமி தூரன் காலத்தில் தமிழ்நாட்டில் கலைச்சொல் அகராதி தயாரிப்பின்போது வேதியியல் கலைச்சொற்களை விபுலானந்த அடிகள் தமிழுக்கு வழங்கி இருக்கிறார். அவருக்கு தமிழ்நாட்டில் சிலை இருக்கின்றதா? என்று எனக்குத்  தெரியவில்லை.

சுவாமி விபுலானந்த அடிகளார் (1892.03.27 - 1947.07.19)

துறவியாக அடையாளப்படுத்ப்படும் அடிகளார் 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் இலங்கை மற்றும் இந்தியாவில் பெரும் புரட்சியாளராக, பல்வேறு மாற்றத்திற்குவித்திட்டவராக இருந்தார் என்பதை இன்னும் ஆய்வுகள் முழுமையாக வெளிப்படுத்தவில்லை என்பது உண்மை.

இறுதிக்காலத்தில் காவியுடைதரித்த ஒரு சுவாமியாக மறைந்தார் என்பதே அவரது அடையாளமாக நிலைத்துவிட்டது என்பதுடன் அதற்கு முன் அவர் ஆற்றிய பணிகளும், பயணங்களையும்  அந்த அடையாளத்தில் ஒடுங்கிவிட்டது.

விஞ்ஞானம் குறிப்பாக வேதியல் கற்ற  ஆனால் உலகின் முதல் தமிழ்ப்பேராசிரியர்,

இன்று இலங்கைத்தமிழர்களும், சைவமும் எதிர்கொள்ளும் சவால்களை விடப் பலநூறுமடங்கு சவால்கள் அன்று அந்நியாகளால் இருந்தபோதும் அவற்றை உடைத்து சைவத்தையும் தமிழையும் மீட்ட பெரும் புரட்சியாளன்.

வர்க்கம், சாதியம் எனத் தமிழினம் அடிமைப்பட்டுக்கிடந்த காலத்தில் அதில் இருந்து மக்களை மீட்க உழைத்த பெரும் போராளி.

தமிழ்நாட்டின் கலைச்சொல்உருவாக்கக் குழுவின்  தலைவராகவும், வேதியியல் கலைச்சொல் நூற் குழுவின் தலைவராகவும் இருந்து பச்சிப்பன் கல்லூரியலில் இருந்து பணியாற்றிய மாபெரும் கல்வியாளன் என்பது நம்மில் பலர் அறியாத தகவல்.

இலங்கையில் தமிழ்தேசியம் எழுச்சிபெற்றகாலத்தில் முன்னின்று பணியாற்றியதுடன், யாழ்ப்பாணத்தில் இளைஞர் காங்கிரஸ் உருவாக்கத்திலும்  முதன்மையானவர் என்பது மறைக்கப்பட்ட தகவல்களா?  எனக்கேட்கத்தோன்றுகின்றது.

முத்தமிழ்வித்தகர், பேராசிரியர், ஆய்வாளர், ஆசிரியர், அதிபர், இராமகிருஸஷண சங்கத்தின் முகாமையாளர், எனப் பல தகவல்கள் பற்றிப் பேசினாலும் பேச பல பக்கங்கள் இன்னும் உண்டு.

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#கேஎஸ்_இராதாகிருஷ்ணன்
#KSR_Post
19-3-2023.


No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...