Friday, July 22, 2016

அடவி நயினார் அணை:

அடவி நயினார் அணை:

அடவிநயினார் அணை திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டை வட்டத்தில் அனுமந்தநதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் வாய்ந்த பகுதியில் இவ்வணை மேக்கரை என்னும் ஊருக்கு அருகில் அமைந்துள்ளது. வயல்களும், மலைகளும் சூழ, எங்கும் பச்சைப் போர்வையை போர்த்திக் கொண்டது போல் காணப்படும் அழகிய ஊர் இது . 

இந்த அணை மூலம் வடகரை கீழ் பிடாகை, பண்பொழி, குத்துக்கல் வலசை, அச்சன் புதூர், நையினாகரம், ஆய்க்குடி, இலத்தூர், கொடிக்குறிச்சி, நெடுவயல், கிளங்காடு, வடகரை மேல்பிடாகை உள்ளிட்ட கிராமங்கள் பயன் அடைந்து வருகின்றன. 2003 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த அணையின் மூலம் சுமார் 7,500 ஏக்கர் நிலம் #பாசன வசதி பெறுகிறது. குற்றால சீசன் நேரத்தில் தமிழக சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி கேரளா உட்பட பிற மாநில சுற்றுலா பயணிகளும் இங்கு வருகை தருவர்.

No comments:

Post a Comment

#Bungalow, #Banglā, #bungalo, #banggolo

#Bungalow, #Banglā, #bungalo, #banggolo.  A single storied living quarter for the prosperous commoner. Typically  a 'garden house'; ...