மாணவர்களுக்கு கல்விக் கடன் என்று பசப்பு வார்த்தைகள், ஆனால் நடப்பதென்ன? ரிலையன்ஸ் போன்ற சம்பந்தமில்லாத இடைத் தரகர்களை வைத்துக்கொண்டு வங்கிகள், மாணவர்களையும், அவர்களுடைய பெற்றோர்களையும் கடன் கட்டவில்லை என்றால் மிரட்டுவது என்ன நியாயம்? இதை கண்டுகொள்ளாமல் பலர் இருப்பது வேதனையான விஷயம். இதுவும் ஒரு மனித உரிமை மீறல். படிப்புக்கும், வாழ்க்கைக்கும் வசதி இல்லாமல் கடன் வாங்குகின்றனர். அரசாங்கமோ அதை பெரிய திட்டம், சாதனை என்று சொல்லி ஏமாற்றுகின்றது. இப்படியெல்லாம் இரட்டை வேடம் போட்டுக்கொண்டு ஒரு பக்கம் சலுகைகள் என்று சொல்லிக்கொண்டு, மறுபக்கம் வங்கிகள் நாகரீகமற்ற வகையில் மட்டரகமாக குண்டர்களைப் போல் இடைத்தரகர்களை அனுப்பி மிரட்டி கடன் வசூல் செய்வது மாபெரும் குற்றம் அல்லவா? சட்டத்திற்கு புறம்பாக தான்தோன்றித்தனமாக நடக்கும் இந்த நடவடிக்கைகளை தட்டிக் கேட்க வேண்டும். இப்படி பாதிக்கப்பட்டோர்கள் இருந்தால் தொடர்பு கொள்ளவேண்டுகிறேன். இதற்குமேல் முறையான நீதிமன்ற நடவடிக்கைகள் சட்டப்பூர்வமாக எடுக்க வேண்டும்.
ரிலையன்ஸ் நிறுவனம் வங்கிகளில் கல்வி கடன் பெற்றவர்களிடம் இருந்து அதை வசூலிக்க நடவடிக்கையில் இறங்குவது யார் கொடுத்த அதிகாரம். ரிலையன்ஸுக்கு என்ன தகுதியும், உரிமையும் உள்ளது. இப்படியான கெடுபிடி நடவடிக்கையில் இறங்கினால் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சில சலுகைகளும் சட்டத்திற்கு புறம்பாக வங்கிகள் வழங்கியுள்ளதாக செய்திகள் வருகின்றன.

No comments:
Post a Comment