Wednesday, July 13, 2016

டேவிட் கேமரூன்


பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் இன்று பதவி விலகியபோது,  பிரிட்டன் நாடாளுமன்றத்தில் (House of commons) ஒரு மணி நேரம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு சலிக்காமல் முகமலர்ச்சியுடன் நகைச்சுவையுடனும், நையாண்டியுடனும் பதில் கூறினார். அப்போது "இங்கிருந்து பக்கிங்காம் அரண்மனைக்கு சென்று ராணி எலிசபெத்திடம் எனது ராஜினாமா கடிதத்தை கொடுத்துவிட்டு, அங்கிருந்து 10, டவுனிங் ஸ்ட்ரீட்டுக்கு சென்று எனது வீட்டை காலி செய்யப் போகிறேன். அதற்கு முன்னர் தற்போது உங்கள் முன்னால் பேசிக்கொண்டிருக்கின்றேன்" என்று சாதாரணமாக பேசினார். அவரது பணிகளை ஆற்றிவிட்டு House of commonsலிருந்து வெளியேறியபோது அனைத்து உறுப்பினர்களும் அரசியல் மனமாச்சர்யங்களை கடந்து கரவொலியை எழுப்பி அவரை வழியனுப்பி வைத்தனர்.  கல்லூரியில் படிப்பை முடித்துவிட்டு விடுதியிலிருந்து வெளியேறும்போது ஒருவிதமான இழப்பு தெரியும். அந்த முகபாவனையோடு டேவிட் கேமரூன் கிட்டதட்ட 30 ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் தான் உலாவிய இடத்தை விட்டு வெளியே வெளியே வந்தார். பிரதமர் பதவியையே துட்சமாக மதித்து விலகிய மனது யாருக்கு வரும்.

பிரதமர் இல்லமான 10, டவுனிங் ஸ்ட்ரீட்டிலிருந்து தனது உடைமைகளை தானே லாரியில் ஏற்றினார். அங்கு பத்திரிகையாளர்களையும் சந்தித்தார். பதவி விலகியதில் எந்தவிதமான சலிப்பும் வருத்தமும் இல்லாமல் வெளியேறிய டேவிட் கேமரூனுடைய அணுகுமுறையை நாம் பாராட்ட வேண்டும்.

ஜனதா ஆட்சி வீழ்ந்தவுடன் மொரார்ஜி தேசாய் பிரதமர் பதவியிலிருந்து விலகியபோதும், 1990ல் வி.பி. சிங் பிரதமராக இருந்தபோது நடுநிசி வேளையில் நாடாளுமன்ற வளாகத்தில் தன்னுடைய பதவியை விட்டு வெளியேறிய காட்சியையும் கண்டோம். வாஜ்பாய் சில நாட்களிலேயே பதவி விலகியதை பார்த்தோம். ஆனால் டேவிட் கேமரூன் தனது பணிகளை ஆற்றிவிட்டு பதவி விலகியபோது அவருக்கு கிடைத்த மரியாதையும், கௌரவமும் மெய் சிலிர்க்க வைத்தது. அதுதான் குடியாட்சி. ஆரோக்கியமான ஜனநாயகம்.  எப்படி இருந்தாலும் டேவிட் கேமரூன் வெளியேறிய இடம் உலகத்தின் தாய் நாடாளுமன்றம் அல்லவா?  இந்த பாங்கு இந்தியாவிலோ, தமிழகத்திலோ வருமா?

நண்பர்களே கீழ்கண்ட வீடியோவில் House of Commons லிருந்து டேவிட் கேமரூன் தன்னுடைய பிரதமர் பதவியை விட்டு விலகியபின் எவ்வளவு கண்ணியத்தோடு வழியனுப்பப்படுகிறார். பாருங்கள்.

https://www.facebook.com/ukparliament/videos/10154337567612733/

No comments:

Post a Comment

காலம் காலமாக நம்மை யாரேனும்

 காலம் காலமாக   நம்மை யாரேனும்  நினைவில் வைத்திருத்தல்  அத்தனை இலகுவான விடயமா என்ன அதற்கு  ஏதெனுமொரு காரியத்தை  பெரிதாய் செய்திருக்க வேண்டும...