இந்த தேவாலயத்தின் மற்றொரு முக்கிய அம்சம் இங்குள்ள மணி கோபுரம். இந்த கோபுரத்தில் மொத்தம் ஆறு மணிகள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் சுமார் 150 கிலோ எடை கொண்டவை. சென்னை நகரில் தற்போது இருப்பவற்றிலேயே அதிக எடை கொண்ட இந்த மணிகள், காலங்கள் கடந்தும் இன்றும் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கின்றன.
இந்த தேவாலயத்தைப் போன்றே ஒரு ஆழ்ந்த அமைதியை நமக்கு பரிசளிக்கக் கூடிய மற்றொரு தேவாலயம், அமெரிக்க துணைத் தூதரகத்திற்கு அருகில் இருக்கும் செயின்ட் ஜார்ஜ் கதீட்ரல்.
சுமார் 200 ஆண்டுகள் பழமையான இந்த தேவாலயம், கிரேக்கர்களின் ஐயானிக் பாணியில் கட்டப்பட்டுள்ளது. முக்கோண கூரையும் அதனைத் தாங்கும் வேலைப்பாடுகள் கொண்ட உயர்ந்த தூண்களும் கொண்ட ஐயானிக் பாணி, அந்தக்கால கிரேக்கர்களால் மிகவும் ஸ்டைலான மாடலாக கருதப்பட்டது.
No comments:
Post a Comment