Thursday, July 7, 2016

Australia Elections...

யார் ஆட்சி அமைப்பர்?: இழுபறி நீடிக்கிறது!

ஆஸ்திரேலிய தேர்தல் களம் எந்த கட்சி ஆட்சி அமைக்கும் எனும் நிலையை அறியாமலேயே தொடர்கிறது. பெரும்பாலும் ஆளும் Coalition (லிபரல் + நேஷனல்) ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளும் என்றாலும், சிறு கட்சிகளின் துணையுடனேயே அதனால் ஆட்சி அமைக்க இயலும் என்று கணிக்கப்படுகிறது.

பிரதமர் Malcolm Turnbull அவர்கள் இன்று Queensland சென்று Katter கட்சியின் தலைவரும் புதிய MP யான Bob Katterஐ சந்திக்கவுள்ளார். அவரின் ஆதரவுடன் Malcolm Turnbullஆட்சியை தக்கவைக்க திட்டமிட்டிருப்பதாக நம்பப்படுகிறது.

லேபர் கட்சி அதிக இடங்களை கைப்பற்றும் வாய்ப்பு குறைவு என்பதால் அது ஆட்சி அமைக்க கடும் முயற்சியில் இறங்காது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இதுவரை எண்ணப்பட்ட சுமார் 82 சத வாக்குகளின் அடிப்படையில் லேபர் கட்சி 66 இடங்களையும், ஆளும் லிபரல் + நேஷனல் கூட்டணி 72 இடங்களையும், Greens கட்சி ஒரு இடத்தையும், சுயேட்சைகள் அல்லது சிறு கட்சிகள் 4 இடங்களையும் கைப்பற்றியிருப்பதாக ABC கணிப்பு தெரிவிக்கிறது. 7 இடங்களில் தொடர்ந்து இழுபறி நிலை நீடிக்கிறது.

Prime Minister Malcolm Turnbull is expected to fly to Queensland today to meet re-elected MP Bob Katter, as the count puts the Coalition ahead of Labor in the seat tally. Counting continues today, with the Coalition currently six seats ahead of Labor on 72 and 66 seats respectively in Australia.

No comments:

Post a Comment

காலம் காலமாக நம்மை யாரேனும்

 காலம் காலமாக   நம்மை யாரேனும்  நினைவில் வைத்திருத்தல்  அத்தனை இலகுவான விடயமா என்ன அதற்கு  ஏதெனுமொரு காரியத்தை  பெரிதாய் செய்திருக்க வேண்டும...