Thursday, July 7, 2016

Central- State realtions

ஒரு மாநிலத்தின் பொதுக்கடன் (Public debt) எவ்வாறு உருவாகிறது? நடுவண், மாநில அரசுகள் தனித்தனியே வரி விதிக்கும் அதிகாரங்கள் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உள்ளன. இந்திய அரசமைப்புச் சட்ட அவையில் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிதி அதிகாரங்கள் மிக மிகக் குறைவாக உள்ளன என்று பலர் வாதிட்டனர். குறிப்பாக, டி.டி. கிருஷ்ணமாச்சாரி, கே.சந்தானம், ஏ.ராமசாமி முதலியார் ஆகியோர் 1935-ஆம் ஆண்டு சட்டத்தில் உள்ள நிதிப் பிரிவுகள்தான் புது அரசமைப்புச் சட்டத்திலும் உள்ளன.

இத்தகைய  சூழலில் மாநில அரசுகள் மக்களுக்குப் பணியாற்றும் துறைகள் அதிகம் உள்ளன. இந்த அமைப்பு முறை செயல்பட்டால், மாநிலங்கள் நடுவண் அரசிடம் பிச்சை எடுக்கும் நிலை ஏற்படும் (The State will be the beggers at the doorsteps of the Centre) என்று குறிப்பிட்டனர். இந்த எதிர்ப்புக்குப் பின்னரே, நடுவண் அரசின் வரிகளில் இருந்து மாநிலங்களுக்குத் தொகையைப் பிரித்துக் கொடுக்கும் நிதிக் குழுவை (Planning Commission) உருவாக்கும் அதிகாரம் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 280-வது பிரிவில் வகை செய்யப்பட்டது.2014-15ல் 5.98 விழுக்காடு நிதிப் பற்றாக்குறை உள்ளது. இன்றைக்கு நடுவண் அரசுக்கு 32,11,850 கோடி அளவுக்குக்கு வெளிநாட்டுக் கடன் மட்டும் உள்ளது. இதில் 40 விழுக்காடுக்கு மேல் வணிகக் கடன் ஆகும். இந்தக் கடனால்தான் இந்தியா மற்ற நாடுகளுக்குச் செலுத்த வேண்டிய வட்டி தொகையும் அதிகரித்த வண்ணம் உள்ளது. நடுவண் அரசு ஏழைகள் தொடர்பாக சமூக நலத் திட்டங்களுக்கான நிதியைத் தொடர்ந்து குறைத்துவரும் நிலையில், 2014-15 ஆண்டில் ரூ.5,90,00 கோடி வரிச் சலுகைகளை பெருமுதலாளி நிறுவனங்களுக்கு வாரி வழங்கியுள்ளது. 2005-06 முதல் 2014-15 வரையிலான பத்து ஆண்டுகளில் இந்த வரிச் சலுகையின் தொகை அளவானது ரூ.42,57,000 கோடியைக்  கடந்துள்ளது. -

No comments:

Post a Comment

காலம் காலமாக நம்மை யாரேனும்

 காலம் காலமாக   நம்மை யாரேனும்  நினைவில் வைத்திருத்தல்  அத்தனை இலகுவான விடயமா என்ன அதற்கு  ஏதெனுமொரு காரியத்தை  பெரிதாய் செய்திருக்க வேண்டும...