Thursday, July 7, 2016

மணல்கொள்ளை

மணல்கொள்ளை: வரி ஏய்ப்பு... கள்ளப் பணம்...'
=========================

காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டும்தான் மணல் அள்ளப்பட வேண்டும் என்பது விதி. ஞாயிற்றுக்கிழமைகளில் அரசு குவாரிகளை இயக்கக் கூடாது. ஆனால், இதற்கு முற்றிலும் நேர்மாறான போக்குதான் இங்கு உள்ளது. இந்த மணல் கொள்ளையின் மூலம் மாநில அரசின் வருவாய் குறைவதோடு மட்டுமல்லாமல், மத்திய அரசுக்குச் சேர வேண்டிய வருமான வரியும் ஏய்க்கப்படுகிறது. 
2011 சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது , கரூரில் பேசிய முதல்வர் ஜெயலலிதா அவர்கள் , தான் ஆட்சிக்கு வந்தால் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்துவேன் என்றெல்ல பேசினார்.

ஆனால் ஜெயலலிதா அவர்கள் ஆட்சிக்கு வந்த பின்பு #மணல்கொள்ளை படு வேகத்துடன், திட்டமிட்ட முறையில் (systemetic ) நடக்கிறது.

(இன்று மணல்குவாரியின் மூலம் அரசுக்கு செல்லும் வருமானம் இல்லாமல், தினமும் எடுக்கும் 90,000 லாரிகள் மூலம் ஒரு லாரி லோடுக்கு 10,000/= வீதம் குறைந்தபட்சம் 90 கோடி ரூபாய் இந்த நாட்டை ஆளும் ஆளும்கட்சியினரும்- அதிகாரிகளும் - மணல் கொள்ளையர்களும் கொள்ளையடித்து பங்கு போட்டு வருகிறார்கள்.

கணக்கு இதுதான்:

ஒரு லாரி லோடு மணல் அரசு விலை 3 யூனிட்டுக்கு ரூ.945 /=;.

லோடிங்க் அன்லோடிங்க் ஒரு லாரிக்கு 1000/=.;

100 கிலோமீட்டர் தூரம் லாரி வாடகை அதிகபட்சம் ரூ.5,000/=; என

வைத்துக் கொண்டாலே, அதிகபட்சம் ஒரு லாரி லோடு ரூ.7,000/= மட்டுமே ஆகும்.

ஆனால் ஒரு லாரி லோடு மணல் மிக,மிக, மிகக் குறைவாக

கோவையில் ரூ.12,000/=,,முதல்ரூ.20,000/=

சென்னையில் ரூ.20,000/ to 40,000/ =.

அண்டை மாநிலங்களில் ரூ. 80,000/= முதல் 1,00,000/= வரை விலை வைத்து விற்கப்படுகிறது.

ஒரு லோடுக்கு சராசரியாக சுமார் 10,000/= வரை கூடுதலாக கிடைக்கிறது என்றாலே தினமும் 90,000 லோடுக்கு - 90 கோடி/= கிடைக்கும்

ஓராண்டில் மணல் கொள்ளையில் மட்டும் தமிழகத்தில் சுமார் 33,000 கோடி ரூபாய் பகிரங்கமாக அரசு-அதிகாரிகள்- மணல் மஃபியாக்கள் மூலம் தற்போது கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. 

மணல் கொள்ளையில்  தமிழகத்தில்  கிடைக்கும் சுமார் 33,000 கோடி ரூபாய் என்பது    உண்மையில் தமிழகத்தில் மது மூலம் கிடைக்கும் விற்பனை வருவாயை விட அதிகமானது.

No comments:

Post a Comment

காலம் காலமாக நம்மை யாரேனும்

 காலம் காலமாக   நம்மை யாரேனும்  நினைவில் வைத்திருத்தல்  அத்தனை இலகுவான விடயமா என்ன அதற்கு  ஏதெனுமொரு காரியத்தை  பெரிதாய் செய்திருக்க வேண்டும...