Friday, July 8, 2016

தென்காசி , ஆயக்குடி ராமகிருஷ்ணன் என்ற மா மனிதர் :).                                    
                          .                                                 From Sarma Sastrigal Facebook    
========================
''மாமி, தப்பாக எடுத்துக்கொள்ள வேண்டாம். அந்த காலத்தில் இவரை கல்யாணம் செய்துக்கொள்ள உங்களுக்கு எப்படி மனசு  வந்தது..?” எனத் தயங்கி தயங்கி மனசில் ஒடிக்கொண்டிருந்த  கேள்வியை, மஹா யோகியாகவும் தபவிஸ்யாகவும் எனது கண்களுக்கு  தெரிந்த ஆயிக்குடி அமர சேவ சங்க ஸ்ரீ ராமகிருஷ்ணன்  அவர்களின் மனைவியிடம், அந்த மஹாலக்ஷ்மியிடம்,  கேட்டே விட்டேன்.  

கழுத்துக்கு கீழே எந்த அவயத்திலும் ஸ்மரனை இல்லாத  நிலையிலும் மகத்தான சமுதாய சேவை செய்து ஆதர்ஸ புருஷராக விளங்கும் ஸ்ரீ ராமகிருஷ்ணன் அவர்கள் கட்டிலில் படுத்துகொண்டே  எனது பேச்சை புன்சிரிப்புடன் செவிமடுத்திக்கொண்டிருந்தார். ஜூலை 6-ந் தேதி அன்று தென்காசி அருகில் உள்ள ஆயிக்குடி சென்று இந்த தம்பதிகளை அவர்களது இல்லத்தில் சந்தித்தபோதுதான் இந்த உரையாடல்.

இதோ எனக்கு கிடைத்த, அந்த தர்ம பத்னி அளித்த, பதில்:

:மாமா, கழுத்துக்கு கீழே  எந்த அவயத்திலும் ஸ்மரனை இல்லாத  நிலையிலும் இவர் மூலம், தான் சங்கல்பித்ததை நடத்தி  காட்டியுள்ளார் பகவான். என்னை பொறுத்த வரையில் இவருக்கும் ஸ்வாமிக்கும் எந்த வித்யாசமும் கிடையாது. இவருக்கு சேவை செய்வதை  அந்த பகவானுக்கு  ஆராதனை செய்வதாகத்தான் நினைத்தேன். இந்த ஒரு காரணம் போதாதா நான் இவரை கல்யாணம் செய்துக்கொள்ள.....! ”

இக்கால ‘மனித அதிசயம்’  (Human wonder) என்றால் இதுதான்.

No comments:

Post a Comment

காலம் காலமாக நம்மை யாரேனும்

 காலம் காலமாக   நம்மை யாரேனும்  நினைவில் வைத்திருத்தல்  அத்தனை இலகுவான விடயமா என்ன அதற்கு  ஏதெனுமொரு காரியத்தை  பெரிதாய் செய்திருக்க வேண்டும...