Friday, July 8, 2016

காங்கேயம் மாடுகள்.

காங்கேயம் மாடுகள்.                  
-------------------
இயற்கை விவசாயத்தின் முக்கிய மூலதனம் நாட்டு மாடுகள் ... காங்கேயம் காளைகளும் மாடுகளும் கொங்கு பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்றவை ...

நாட்டு மாட்டினங்கள் அழியாமலிருக்க வேண்டுமானால் .. அதற்கான காயடிக்கப்படாத இனவிருத்திக்கான காளைகளை பராமரிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியம் ...

காளைகளை பராமரிப்பது என்பது மிகவும் கடினமாக காரியம்  .. உழுவதற்கும் வண்டி இழுக்கவும் ட்ராக்டர்கள் வந்த பின்னர் காளைகள் அவசியமில்லாமல் போனது ... 

அதேபோல் 20 .. 30 லிட்டர் வியர்வையை பாலாக பீச்சும் ஜெர்சி மாடுகள் வந்தபின்னர் .. நாட்டு மாடுகளும் அழிவைத்தேடி .. கறிக்காக கேரளாவிற்கு வெட்டுக்கு போகும் நிலை வந்தது ...

ஓரளவுக்கு காளைகள் காப்பாற்றப்பட்டு .. நாட்டுமாடுகள் அழியாமல் இருக்க ... முக்கியமான காரணம் கொங்கு பகுதியில் நடக்கும் ரேக்ளா ரேசும் ...தென்சீமையில் நடக்கும் ஜல்லிக்கட்டும் ...

பன்னாட்டு நிறுவனங்களின் ஆசிபெற்ற PETA.. AWBI போன்றவை நாட்டு மாட்டினம் காப்பாற்றப்படுவதற்கு வேட்டுவைக்கும் வகையான பெரும்பணமுதலைகளின் உதவியுடன் ஜல்லிக்கட்டுக்கும் .. ரேக்ளா பந்தயத்திற்கு தடை வாங்கியுள்ளது ...

இந்த தடைகள் நீங்க மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதிலும் .. பீட்டாவை எதிர்த்து போராடுவதிலும் முதன்மையானவர் நமது கார்த்திகேய சேனாபதி அவர்கள் ...

இவரின் #காங்கேயம்மாடுகள் ஆராய்ச்சி மற்றும் காக்கும் மையம் .. காங்கேயம் இன மாடுகளை அழிவிலிருந்து காப்பாற்றி .. அவற்றை வளர்ப்பவர்களுக்கு உதவி வருகிறது ...

இப்படிப்பட்ட சேவை மனம் படைத்த .. சமுதாய முன்னேற்றத்திற்காக பாடுபடும் கார்த்திகேய சேனாபதி .. எங்கள் இளம் விவசாயக்கல்லூரி மாணவர்களிடம் நாட்டு காளைமாடுகளின் அவசியத்தை காரணகாரியங்களோடு எடுத்துரைத்தது பெரும் மகிழ்வை தந்தது ...

நாட்டு மாட்டினங்கள் காப்பாற்றப்படவேண்டும்... வருங்கால சந்ததிகள் மருத்துவ குணம் கொண்ட ஏ2 ரக பாலையே குடித்து வளரவேண்டும் ...

சேனாபதி போன்றோரின் சேவை பாராட்டுக்கும் போற்றுதலுக்கும் உரியது ..

No comments:

Post a Comment

காலம் காலமாக நம்மை யாரேனும்

 காலம் காலமாக   நம்மை யாரேனும்  நினைவில் வைத்திருத்தல்  அத்தனை இலகுவான விடயமா என்ன அதற்கு  ஏதெனுமொரு காரியத்தை  பெரிதாய் செய்திருக்க வேண்டும...