Thursday, July 7, 2016

P. Ramachandran , CPM leader

Man of principles; I was close to him from 1989.
Whenever I was @ Delhi,PRC invited AKG Bawan for discussion& tea. Kind& simple personality.               
-------------------------------------
P.Ramachandran, CPM leader -ஆர்.எஸ். மணி
..............................................................
வசீகர சிரிப்பு,  கண்களில் மின்னும் ஒளி, மடக்கி விடப் பட்ட முழுக்கை சட்டை , மேலேயேற்றி சீவிய கலையாத கேசம், கைகளில் தினசரி புத்தகங்கள்  சகிதம் வேட்டி உடையில் , செம்மீன் சத்யன் சாயலில்   வேட்டியின் ஒரு நுனியைப்பற்றிக்கொண்டு வேகமாக நடந்து வரும் அந்த தோழரைப்  பார்த்ததும் எதிரில் வருபவர் எவரும் வயப்பட்டுவிடுவர். வாஞ்சையோடு நம் கரங்களைப் பற்றிக் கொண்டும்  ஊடுருவும் கண்களோடும் பேசுவது அவரது வழக்கம்.  மார்க்சீயக் கம்யூனிஸ்ட் கட்சியினை உருவாக்கிய நவ ரத்தினங்களுக்கு அடுத்த வரிசையில்  திகழ்ந்த   உன்னதத் தலைவர்களில் ஒருவரும்,  மத்திய செயற்குழுவிலும் முத்தாய்ப்பாக அரசியல் தலைமைக்குழுவிலும் பணியாற்றியவருமான அருமைத் தோழர் பி.ராமச்சந்திரன்  பிறந்தது கேரள மண் என்றாலும் , படித்ததும் இயக்கத்தில் பணியாற்றியதெல்லாமே  தமிழகத்தில் குறிப்பாக தியாக பூமியாம் திருச்சியில்தான்..!!

 மாணவப்பருவத்திலே மாணவர் தலைவராகத் திகழ்ந்த அவர் ,  இளம் வயதிலேயே இடதுசாரி இயக்கத்தில் இணைந்து , இணையற்ற தோழராக ,தலைவராக, மாணவ- வாலிபர் இயக்க வழிகாட்டியாக ,அரசியல் வகுப்பு எடுக்கும் நல்லாசானாக தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதும் வலம் வந்தவர்;  இடதுசாரி . இயக்கத்துக்கு பலம் தந்தவர்.

ரயில் பயணங்களிலும்  ஜெயிலிலும் இயக்கப் பணிகளை செய்து கொண்டே  ஏராளமான புத்தகங்களை வாசித்தார். வாசித்ததை வகுப்புகளிலும் உரையாடல்களிலும் பகிர்ந்து கொள்வார் தோழர்களுடன் உற்சாகமாக. ..!!

தியாகம், கடும்  உழைப்பு. போர்க்குணம். கற்றல், கற்பித்தல் இவையே அவரது சிறப்புகளாக இறுதி மூச்சுவரை இருந்தன.

எழுபதுகளின் பிற்பகுதியில் அவருக்கு பரிச்சயமானேன்.  பின்னர் அவரால் ஈர்க்கப்பட்டு நெருக்கமானேன் . அவர்  திண்டுக்கல் வரும்போதெல்லாம் எங்கள் இல்லத்தில் தங்க வைப்பேன்; தங்க விரும்பவும் செய்வார்...!! என் முன்னேற்ற்த்தில் மட்டுமல்ல என் குடும்ப அங்கத்தினர்கள் அனைவரது முன்னேற்றத்திலும் அக்கறை எடுத்துக் கொண்டவர்.  அரைமணி நேரம் கிடைத்தாலும் பயனுள்ள தகவல்களைப் பகிர்வதும்  வாசிப்பை ஊக்கப்படுத்துவதும் அவரது அற்புத நற்குணங்கள் .

    FRONTLINE  இதழில் வந்த கட்டுரைகள் பற்றியே விவாதம் பெரும்பாலிருக்கும்.  " உன்னால் முழு இதழையும் படித்துவிட முடிகிறதா ? " என்று கேட்டுவிட்டு  "  என்னால் முடிவதில்லை " என்று தன்னடக்கத்துடன் பதிலும் அவரே சொல்லி முடிப்பார்.  

  இன்று  அவரது புதல்வர் விஜய்  அதன் ஆசிரியர் பொறுப்பில் அமர்ந்து அருமையாக நடத்திவருவதையும் ,அவரது  மகள் வழிப் பேத்தி மதுமிதா சந்திரசேகர் முன்னணிப்பத்திரிக்கையில் பணியாற்றி இதழியல் துறையில் சாதித்து வருவதையும் , அவரது புதல்வி தோழர் பத்மா அவர்கள் குழந்தை இலக்கிய எழுத்தாளராக மின்னுவதையும் பார்க்க அவரில்லையே என்று தோன்றுகிறது ..!!

குடும்பத்தையே இயக்கத்தில் ஈடுபடுத்திய தலைவர்களில் அவரும் ஒருவர்.

புத்தகங்கள் வாசிப்பு என்றாலே  நினைவுக்கு வரும் தலைவர்களில் அவரும் ஒருவர்.                                        இன்றையத் தலைவர்கள் பலரை செதுக்கி உருவாக்கிய மார்க்சீய மேதை  தோழர் பி. ஆர். சி . அவர்கள் என்றென்றும் அனைவர் நெஞ்சங்களிலும் வாழ்ந்து கொண்டிருப்பார்..!!! வீரவணக்கங்கள்..!!

( 08..07..16   ---தோழர் பி ராமச்சந்திரன்   நினைவு தினம் )----------------------------------------------

ஆர்.எஸ். மணி

No comments:

Post a Comment

காலம் காலமாக நம்மை யாரேனும்

 காலம் காலமாக   நம்மை யாரேனும்  நினைவில் வைத்திருத்தல்  அத்தனை இலகுவான விடயமா என்ன அதற்கு  ஏதெனுமொரு காரியத்தை  பெரிதாய் செய்திருக்க வேண்டும...