Sunday, July 10, 2016

South Sudan

இன்று தெற்கு சூடான் விடுதலை பெற்ற நாள்.

ஆப்பிரிக்கக் கண்டத்தில் பரப்பளவில் மிகப்பெரிய நாடு சூடானாகும்

சூடானின் வரலாற்றில் கி.பி. 324 வரை அந்த நாடு சுதந்திரநாடகவே இருந்தது. நாட்டின் வளங்களை எடுப்பதற்கும், தங்களின் ஆளுகைக்குள் வைப்பதற்கும் எகிப்தியரும், துருக்கியரும் காலங்காலமாக திட்டம் போட்டுச் செயற்பட்டு வந்துள்ளனர். 14 ஆம் நூற்றாண்டிற்கும் 19 ஆம் நூற்றாண்டிற்கும் இடையில் துருக்கியின் ஒட்டோமன் பேரரசின் கீழ் சூடான் அடிமைப்பட்டுக் கிடந்தது. 

பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதிக்காலத்தில் (1880 இல்) காலாங்காலமாக அடிமைப்பட்டுக் கிடந்த சூடான் மக்களின் விடுதலைக்காக ‘மகதி’ என்ற மாவீரன் மக்களைத் திரட்டி விடுதலைப் போர் தொடுத்தான். துருக்கிப் படையின் பக்க பலமாக பிரித்தானியப் படைகள் நின்ற போதும் மகதியின் வழிகாட்டலில் போராடிய போராளிகள் மிகவும் உறுதியுடன் போராடியதன் விளைவு துருக்கிப் படைகள் திணறியதாக அப்போதைய வரலாற்று தகவல்கள் கூறுகின்றன. இந்தப் போரின் விளைவாக சூடான் சூடானியர் வசமானது. இக்காலப்பகுதியில் மகதி நெருப்புக் காச்சலால் உயிரிழக்கின்றார். அவ்வேளை மீண்டும் பிரித்தானியா சூடானை தனது பிடிக்குள் கொண்டுவருகின்றது.

பிரித்தானியர் சூடானை தமது பிடிக்குள் கொண்டுவந்த பின்னர் 1930 காலப்பகுதியில் சூடானையும், தெற்குசூடானையும் தனித்தனியே பிரித்து வைத்தே தமது காலணியாக வைத்திருந்தது. உலகப் போரில் பலவீனமடைந்த பிரித்தானியா 1956 இல் சூடானை விட்டு வெளியேறுகின்றது. அப்படி வெளியேறும் போது பிரித்தாளும் தந்திரோபாய நடவடிக்கையாக ஆட்சிப் பொறுப்பை அரபு மொழி பேசும் பெரும்பான்மையினரிடம் ஒப்படைத்து விட்டுச் சென்றனர். (சிறிலங்காவில் தனிச் சிங்களச்சட்டம் பௌத்தநாடாக்குவது போன்றது.) சூடானை தனி அரபுமயமாக்கும் நடவடிக்கையில் சூடானின் வடக்கில் உள்ள சூடானிய அரபியர் தீவிரமாக ஈடுபட்டனர்.

இதன் காரணமாக தெற்கு சூடான் பழங்குடியினர் தங்களின் உரிமைக்காப் போராடத் தொடங்கினர்.
தெற்கு சூடானில் டிங்கா இனத்தவர் பெரும்பான்மையினராக வாழ்கின்றனர். அவர்களே முழ சூடானையும் அரபுத் தேசமாக ஆக்கப்படுவதை கடுமையாக எதிர்த்தனர்.

இவ்வாறு பல்வேறு நிகழ்வுகளை கடந்து 2011 ஜீலை 9 ந்தேதி, தெற்கு சூடான் முழு விடுதலை பெற்றது.

No comments:

Post a Comment

காலம் காலமாக நம்மை யாரேனும்

 காலம் காலமாக   நம்மை யாரேனும்  நினைவில் வைத்திருத்தல்  அத்தனை இலகுவான விடயமா என்ன அதற்கு  ஏதெனுமொரு காரியத்தை  பெரிதாய் செய்திருக்க வேண்டும...