Sunday, July 10, 2016

USSR

சோவியத் ரஷ்யா (ussr ) ஒரு விவாதம் 
------------------------------------
ஜாரின் மன்னராட்சி - லெனின் - த்ரோஸ்த்கி - ஸ்டாலின் - குருச்சேவ் - கோர்பச்சேவ் - புடின் என்றுதான் நாம் ரஷ்ய வரலாற்றைப் பார்க்கவேண்டும். இதன் தொடர்ச்சியாகவே கடும்போக்காளர்கள் சதி மூலம் #கோர்பச்சேவைக் கடத்தினார்கள். கோர்பச்சேவின் 'பெரஸ்த்ரோய்க்கா' பற்றிப் பேசுவதும் கெட்ட நடவடிக்கை அல்ல. சோசலிச சமூகக் கட்டுமானத்தில் ஒற்றைக் கட்சி அதிகாரம் - சட்டத்தின் சுயாதீன ஆட்சி - நிறுவனங்களை ஜனநாயகப்படுத்துவது என்பதனை கொர்பச்சேவை முன்னிறுத்தி நாம் பேசலாம். தனது ‘ரஷ்யப் புரட்சி : இலக்கியச் சாட்சியம்’ நூலின் இறுதி அத்தியாயமாக இதனைத்தான் எஸ்.வி.ஆர். விரிவாக ஆய்வு செய்திருக்கிறார். சோசலிசச் சமூகக் கட்டுமானத்தில் கட்சியும் ஜனநாயகமும் குறித்து ரோஸா முதலே பேசிவந்திருக்கிறார்கள். விவாதக் கட்டுக்களை அலசுவதென்பதை ஒரு தனிநபரை விதந்தோதுவதாகப்  புரிந்துகொள்வது சரியல்ல. அதுவும் பின் சோவியத் நிலையில் இப்படிப் பார்ப்பது எவ்வாறாயினும் சரியான நிலைபாடு அல்ல..

கே. என். சிவராமன்- Yamuna Rajendran

No comments:

Post a Comment

காலம் காலமாக நம்மை யாரேனும்

 காலம் காலமாக   நம்மை யாரேனும்  நினைவில் வைத்திருத்தல்  அத்தனை இலகுவான விடயமா என்ன அதற்கு  ஏதெனுமொரு காரியத்தை  பெரிதாய் செய்திருக்க வேண்டும...