Tuesday, July 12, 2016

ஆஸ்திரேலியா பொதுத் தேர்தல் / Australia General Election

இது குறித்து கடந்த இரண்டு வாரமாக பதிவுகளை செய்துகொண்டு வருகின்றேன். மால்கம் டர்ன்புல் தேர்தலில் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய பிரதமர் ஆகிவிட்டார். நேற்றைக்கு சிட்னியில் இருந்து இலங்கை தமிழர் நண்பர் சண்முகராஜன் பேசினார். அப்போது ஆஸ்திரேலிய தேர்தல் குறித்து சில செய்திகளையும் கூறினார். ஆஸ்திரேலியாவில் வாக்களிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 1924ல் இருந்து வாக்குரிமையை பயன்படுத்தாவிட்டால் அரசின் சலுகைகள் ரத்து செய்து, ஆஸ்திரேலியா டாலர் 20ஐ அபராதமும் செலுத்தவேண்டும். இந்தியாவைப் பொறுத்தவரை குறைவான வாக்குப்பதிவுகள் நடந்து மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சிகள் அமைகின்றன. இன்னும் வேடிக்கை என்னவென்றால் 35, 40 சதவீத வாக்குகள் பெற்றவர்கூட வெற்றிபெறுகின்றார் இந்தியாவில். 60 சதவீதம் பேர் வாக்களிக்காமலேயே ஒரு தொகுதியில் ஒரு பிரதிநிதி தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்றால் அது ஜனநாயகமா?

ஆஸ்திரேலியாவில் கடந்த மாதம் நடந்த தேர்தலின் முடிவு தேர்தல் முடிந்து ஒரு வாரத்திற்கு பின் ஜூலை 2ம் தேதி தெரிந்துவிடும் என்று நம்பினர். ஆனால் இறுதி முடிவு கடந்த ஜூலை 9ம் தேதிதான் தெரிய வந்தது. கிட்டத்தட்ட இரண்டு வார காலம் வாக்கு எண்ணிக்கையிலேயே காலம் கழிந்தது. விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையில் விருப்பு வாக்குள் (preferencial votes) மேலோட்டமாக வாக்களிக்கலாம்.  இந்தியாவில் எப்போது வாக்களிப்பது கட்டாயமாக்கப்படும் என்பது தெரியவில்லை. எவ்வளவோ தேர்தல் சீர்திருத்தங்கள் பேசப்படுகின்றன.

No comments:

Post a Comment

காலம் காலமாக நம்மை யாரேனும்

 காலம் காலமாக   நம்மை யாரேனும்  நினைவில் வைத்திருத்தல்  அத்தனை இலகுவான விடயமா என்ன அதற்கு  ஏதெனுமொரு காரியத்தை  பெரிதாய் செய்திருக்க வேண்டும...