Wednesday, July 6, 2016

விகடன் தடம் - ஜூலை இதழ்

விகடன் தடம், ஜூலை இதழ் கைக்கு கிடைத்தது. இரண்டாவது இதழ் மேலும் மெருகேறியுள்ளது. பல சங்கதிகளை உள்ளடக்கி ; எடுத்தவுடன் படித்து முடிக்க வேண்டிய கட்டாயச் சூழலுக்கு தள்ளுகிறது. கடந்த காலங்களில் டெல்லியிலிருந்தும், திருவல்லிக்கேணி பெல்ஸ் ரோட்டிலிருந்தும் வெளிவந்த கணையாழி இதழின் நினைவுகளும், மணிக்கொடி, கலாமோகினி, சரஸ்வதி, கசடதபற போன்ற கடந்த கால இதழ்களின் போக்குகள்  விகடன் தடத்தை படிக்கும்போது நினைவுக்கு வருகின்றன. இன்றைக்கு ரசனைக்கு ஏற்ப வெகுஜன இலக்கிய இதழாக விகடன் தடம் திகழ்கிறது. தமிழ் இலக்கிய வரலாற்றில் தன்னுடைய சுவடை பதிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. வாழ்த்துக்கள் விகடன் தடத்துக்கு......

No comments:

Post a Comment

காலம் காலமாக நம்மை யாரேனும்

 காலம் காலமாக   நம்மை யாரேனும்  நினைவில் வைத்திருத்தல்  அத்தனை இலகுவான விடயமா என்ன அதற்கு  ஏதெனுமொரு காரியத்தை  பெரிதாய் செய்திருக்க வேண்டும...